Home
Mobile

2வது போன்லயே கலக்குற CMF.. இவ்ளோ கம்மி விலைக்கு Pro சிப்செட் உடன் இப்படி ஒரு கேமிங் போன்-ஆ!

நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆன சிஎம்எப் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி அதன் இரண்டாவது சிஎம்எப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) மாடல் ஆகும். ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சிப்செட் மற்றும் பெர்பார்மென்ஸ் குறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ (MediaTek Dimensity 7300 Pro) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை சிஎம்எப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனில் டைமன்சிட்டி 7300 (Dimensity 7300) சிப்செட் இருந்தது.

CMF: Pro சிப்செட் உடன் இப்படி ஒரு கேமிங் போன்-ஆ!

ஆகையால் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 7400 (Dimensity 7400) சிப் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சிஎம்எப் நிறுவனம், டைமன்சிட்டி 7300 சிப்பின் ப்ரோ வெர்ஷனை தேர்வு செய்துள்ளது. இது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில் உள்ள டைமன்சிட்டி 7300 சிப் உடன் ஒப்பிடும்போது 10% வேகமான சிபியு மற்றும் 5% வேகமான கிராபிக்ஸ் இம்ப்ரூவ்மென்ட்டை உறுதி செய்கிறது.

மேலும், மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப் ஆனது 6வது ஜெனரஷன் என்பியு-வை பயன்படுத்தும் என்றும், இது 4.8 டாப்ஸ் ஏஐ செயல்திறன், பிஜிஎம்ஐ-யில் 120 பிரேம்ஸ் பெர் செகண்ட் கேமிங், நெட்வொர்க்கில் 53% மேம்பாடுகள் மற்றும் 1000 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆகியவற்றை வழங்கும் என்றும் சிஎம்எப் நிறுவனம் கூறியுள்ளது.

சார்ஜர் உடன் வரும்: இதற்கு முன்னதாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் பிரிக் அனுப்பி வைக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டு இருந்தது. ரீடெயில் பாக்ஸில் சார்ஜர்களை இலவசமாக அனுப்பாமல், அதை தனியாக பணம் செலுத்தி வாங்குங்கள் என்று கூறுவதற்கு பெயர் பெற்ற ஸ்மார்ட்போன் பிராண்டு ஆன 'சிஎம்எப் பை நத்திங்' நிறுவனம் ஆனது, ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகமாகும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் பிரிக் இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த சலுகை இந்தியாவிற்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆன அகிஸ் எவாஞ்சலிடிஸ், எக்ஸ் தளம் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதன் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சார்ஜருடன் அனுப்பப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்பாக எக்ஸ் தளம் வழியாக ஒரு சுருக்கமான வீடியோவாக பகிரப்பட்ட டீஸரில், சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆனது பிளாஸ்டிக் எட்ஜ்கள் (Plastic Edges) மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட பேக் பேனல் (Redesigned rear pane) மற்றும் ஒரு ஸ்க்ரு (Screw) ஆகியவற்றை காட்டுகிறது. டீஸர் வீடியோ வழியாக மேட் பினிஷ உடன் கூடிய பளபளப்பான பேக் பேனலை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

ஆனாலும் பேக் பேனல் எந்த பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்கள் வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலும் இது பிளாஸ்டிக் அல்லது அலுமினியத்தால் (Aluminium) செய்யப்படலாம். தற்போதைய ஜெனரேஷன் மாடலில் (அதாவது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில்) பாலிகார்பனேட் பேக் பேனல் (Polycarbonate rear panel) உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் அதே டீஸர் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் கீழ் இடது பக்கத்தில் சிஎம்எப் பை நத்திங் (CMF by Nothing) லோகோவையும் காண முடிகிறது. இது வெவ்வேறு கோணங்களில் வைத்திருக்கும் போது ஒளி வீசும் லோகோவாக அல்லது இருண்ட லோகோவாக தோன்றுகிறது.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? பெரும்பாலும் இது ரூ.22,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.21,999 க்கு வரலாம். நினைவூட்டும் வண்ணம் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கு அறிமுகமானது.

Best Mobiles in India

English summary
CMF Phone 2 Pro With MediaTek Dimensity 7300 Pro Chip Promises 120 fps gaming in BGMI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X