காதலர் தின சேல்.. மட்ட ரேட்ல CMF போன்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிளிப்கார்ட் வேலன்டைன் சேல் (Flipkart Valentine Day Sale) என்னும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போனின் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் வேலன்டைன் சேலில் 21 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.16,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

அலுமினியம் கேமரா டெகோ, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் க்ரூவ்ஸ் கொண்ட ரீபிளேஸ்சபிள் பேக் கவர் கொடுத்துள்ளது. ஒயிட் (White), பிளாக் (Black), ஆரஞ்ச் (Orange) மற்றும் லைட் கிரீன் (Light Green) கலர்களில் கிடைக்கிறது. மேலும், வாலெட் மற்றும் ஸ்டேண்ட் போன்ற அசசரிகளும் கிடைக்கிறது. 7.8 எம்எம் தடிமன் மற்றும் 185 கிராம் எடை கொடுத்துள்ளது.
சிஎம்எப் போன் 2 ப்ரோ அம்சங்கள் (CMF Phone 2 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Pro 4nm) சிப்செட்டை இந்த சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
நத்திங் ஓஎஸ் 3.2 (Nothing OS 3.2) கொடுக்கப்பட்டு உள்ளது. 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 480 டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாகவும் இந்த சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது. பான்டா கிளாஸ் புரொடெக்சனை (Panda Glass protection) கொடுத்து உள்ளது. 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்து உள்ளது.
இதில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. டெலிபோட்டோவிலும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 20X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த சிஎம்எப் போன் 2 ப்ரோ கொடுத்து உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. மேலும், டைப்-சி ஆடியோ மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








