Home
Mobile

SALE அடிச்சு தூக்குது.. மட்ட ரேட்டுல CMF போன்.. AMOLED டிஸ்பிளே.. EIS கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போனுக்கு ஒரே நேரத்தில் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதனால் கிடைக்காத கம்மி விலைக்கு வாங்கி கொள்ளலாம். அமோலெட் டிஸ்பிளே, ஈஐஎஸ் கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆக இருக்கிறது. இதில் ரூ.2,000 நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் கூடுதலாக ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.

SALE அடிச்சு தூக்குது.. மட்ட ரேட்டுல CMF போன்.. AMOLED டிஸ்பிளே!

இந்த டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும்போது, ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த ஈஎம்ஐ டிஸ்கவுண்ட்டை பெறவதற்கு ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம்.

ஆகவே, ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இது ரூ.3,000 விலை கம்மியாக கிடைப்பதாகும். இந்த சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது, அலுமினியம் கேமரா டெகோ, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்க்ரூவ் மற்றும் மாற்றக்கூடிய பேக் கவருடன் கிடைக்கிறது. ஒயிட் (White), பிளாக் (Black), ஆரஞ்ச் (Orange) கலர்கள் இருக்கின்றன.

சிஎம்எப் போன் 2 ப்ரோ அம்சங்கள் (CMF Phone 2 Pro Specifications): இந்த சிஎம்எப் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Pro 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 (Android 15 OS) கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் உள்ளது.

எஸ்சென்சியல் ஸ்பேஸ் (Essential Space) போன்ற பிரத்யேக பீச்சர்களை கொடுக்கும்படி நத்திங் ஓஎஸ் 3.2 ( Nothing OS 3.2) கிடைக்கிறது. பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கொண்ட 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எடிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) போன்ற ஓடிடி பிரியர்கள் எதிர்பார்க்கும் டிஸ்பிளே பீச்சர்களும் கிடைக்கிறது.

இந்த சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாஜி கிடைக்கிறது.

அதேபோல டெலிபோட்டோ கேமராவில் 2X ஜூமிங் மற்றும் 20X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. மேலும், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. இந்த கேமராவில் 1080p ரெசொலூஷன் ரெக்கார்டிங் மட்டுமே கிடைக்கிறது.

33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. வெறும் 7.8 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 185 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
CMF Phone 2 Pro With 50MP Camera 256GB Storage Available At Rs 17999 in Flipkart Offer Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X