Nothing-ஐ தொடர்ந்து சரண்டர் ஆன CMF.. லேட்டஸ்ட் 5ஜி போன் மீது ரூ.4000 விலை குறைப்பு!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையின் போது, நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடல் மட்டுமின்றி, நத்திங்கின் துணை நிறுவனமான சிஎம்சப் பிராண்டின் ஸ்மார்ட்போன்களும் கூட ஆபர் விலையில் வாங்க கிடைக்கவுள்ளன.
நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.45,000 தள்ளுபடியை (பேங்க் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர்) பெற்று வெறும் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போனின் மீதும் பெரிய அளவிலான விலைக்குறைப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 விற்பனையின் போது சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும். இதன் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனை ரூ.18,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்கலாம்.
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+நானோ)
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.2
- 3 ஆண்டுகளுக்கு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ்
- 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள்
- 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2160Hz PWM ப்ரெக்வன்சி
- 387ppi பிக்சல் டென்சிட்டி
- 480Hz டச் சாம்ப்ளிங் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- HDR10+ ஆதரவு
- பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- ரேம் பூஸ்டர் அம்சத்தின் கீழ் ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.
- 2டிபி வரை மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்
- இரண்டு மைக்ரோஃபோன்கள்
- ஒரு எசன்ஷியல் பட்டன் (இது ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற டேட்டாவை அணுக உதவும் புதிய எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ விரைவாக அணுக அனுமதிக்கிறது)
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.88 மற்றும் EIS உடன் 50 மெகாபிக்சல் 1/1.57-இன்ச் சென்சார்
- எப்f/1.88 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- டெலிஃபோட்டோ கேமராவில் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூமிங் திறன் உள்ளது
- எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேம்படுத்தப்பட்ட கேமரா அவுட்புட்டிற்காக நத்திங் ட்ரூலென்ஸ் எஞ்சின் 3.0 (Nothing's TrueLens Engine 3.0) தொழில்நுட்பம்
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 5000mAh பேட்டரி
- சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 47 மணிநேர அழைப்பு நேரத்தையும், 22 மணிநேரம் வரை யூட்யூப் ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
- ரீடெயில் பாக்ஸ்-ல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் ஒரு கேஸ்
- 5ஜி ஆதரவு
- வைஃபை 6
- ப்ளூடூத் 5.3
- யுஎஸ்பி டைப் சி போர்ட்
- ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 164×7.8×78மிமீ
- எடையில் 185 கிராம்


Click it and Unblock the Notifications








