சைனீஸ் போன்களை செஞ்சி விட்டான்யா.. CMF Phone 2 Pro விலை இவ்ளோ தானா!
அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள், நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் பரார் வழியாக லீக் ஆகி உள்ளது.
நத்திங் பை சிஎம்எப் நிறுவனம் ஆனது, அதாவது நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆன சிஎம்எப் ஆனது வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று ஒரு வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. அந்நாளில் இந்நிறுவனம் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, அதன் புதிய ஆடியோ தயாரிப்புகளை.. இந்தியாவிலும், உலகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஹைலைட் ஆன சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிசைன், கலர் ஆப்ஷன், கேமரா உட்பட பல ஹார்ட்வேர் விவரங்கள் மற்றும் அம்சங்கள் ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் தற்போது லீக் ஆகியுள்ளது .
டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, சிஎம்எப் போன் 2 ப்ரோவின் விலை சுமார் ரூ.20,000 ஆக இருக்கலாம். இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் மாடலின் விலையாக இருக்க வேண்டும். நினைவூட்டம் வண்ணம் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.15,999 க்கு அறிமுகமானது.
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ.20,000 க்கும் சற்று அதிகமாக இருக்கலாம். சரியான விலை நிர்ணயம் ஏப்ரல் 28 நடக்கும் அதிகாரப்பூர்வ வெளியீட்டின் போது தெரிய வரும்.
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது? இந்த ஸ்மார்ட்போன் ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர்களில் டூயல்-டோன் பேக் பேனலுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேக் பேனலின் மேல் பாதி ஆனது லைட்டர் ஷேட்-ஐ கொண்டுள்ளது, அதே நேரத்தில் கீழ் பாதி டார்க் ஷேட்-ஐ கொண்டுள்ளது.
கூடவே பேக் பேனலில் நான்கு ஸ்க்ரூ பாயிண்ட்களையும் காண முடிகிறது. இது பயனர்கள் ஸ்டாண்ட், கார்டுஹோல்டர் அல்லது லேன்யார்டு போன்ற ஆக்சஸெரீஸ்களை கனெக்ட் செய்ய பேனலை அகற்ற அனுமதிக்கும். கடைசியாக சிஎம்எப் (CMF) பிராண்டிங் மற்றும் சான்றிதழ் மதிப்பெண்கள் ஸ்மார்ட்போனின் கீழ் பாதியில் வைக்கப்பட்டுள்ளன.
ஆக சிஎம்எப் போன் 2 ப்ரோ மாடலின் ரீடெயில் பாக்ஸில் ஸ்க்ரூ டிரைவஏ ஒன்று இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்டுடன் இணைந்து மிட்-ரேன்ஜ் வரம்பில் ஒரு அரிய கேமரா ஹார்ட்வேர் ஆன டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டுள்ளது.
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1/1.57-இன்ச் சென்சார் உடனான 50எம்பி வைட் ஆங்கிள் லென்ஸையும், 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸையும், 119.5° பீல்ட் ஆப் வியூ உடனான 8MP அல்ட்ரா-வைட் லென்ஸையும் கொண்டிருக்கும். ரூ.20000 என்கிற விலை உண்மையாக இருந்தால்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆனது இதன் விலைப்பிரிவில் முதன்முதலில் வந்த டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஷார்ப் ஆன ஜூம்-இன் ஷாட்களை வழங்கும் ஸ்மார்ட்போனாக இருக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி ஏப்ரல் 28 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சேர்த்து சிஎம்எப் பட்ஸ் 2, சிஎம்எப் பட்ஸ் 2ஏ மற்றும் சிஎம்எப் பட்ஸ் 2 பிளஸ் ஆகிய புதிய சிஎம்எப் பிராண்ட்ட ஆடியோ தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும். அறிமுகத்திற்கு பின்னர் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆடியோ தயாரிப்புகள் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் (விற்பனை தேதிகள் வெளியீட்டின் போது அறிவிக்கப்படும்)


Click it and Unblock the Notifications