Home
Mobile

இந்த 1 காரணத்துக்காகவே CMF Phone 2 Pro-வை அடிச்சு புடிச்சு வாங்குவாங்களே!

நத்திங் நிறுவனம் என்றாலே விளம்பரமும் பில்ட்-அப்களும் தான். அப்படியாக.. வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போனின் மீதான ஹைப்-ஐ நாளுக்கு நாள் அதிகரிக்க வைக்கும் வேலைகள், பிரமாதமாக நடந்து வருகிறது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான சிஎம்எப் போன் 1 மாடலை போலல்லாமல், சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சில சுவாரஸ்யமான அம்சங்களுடன், ஒரு மிட்ரேன்ஜ் மாட்ல் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய டீஸர் ஒன்றின் வழியாக, இந்த ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த இமேஜிங் செயல்திறனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 1 காரணத்துக்காகவே CMF Phone 2 Pro-வை அடிச்சு புடிச்சு வாங்குவாங்க

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்டுடன் இணைந்து மிட்-ரேன்ஜ் வரம்பில் ஒரு அரிய கேமரா ஹார்ட்வேர் ஆன டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டுள்ளது. இந்த அப்கிரேட்கள் வழியாக சிஎம்எப் நிறுவனம் இந்த ஸ்மார்போனிற்கான பெயரில் உள்ள ப்ரோ என்கிற வார்த்தைக்கு பலம் சேர்ந்துள்ளன என்றே கூறலாம்.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1/1.57-இன்ச் சென்சார் (நத்திங் போன் 3ஏ மாடலில் உள்ள அதே சென்சார்) உடனான 50எம்பி வைட் ஆங்கிள் லென்ஸையும், 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸையும், 119.5° பீல்ட் ஆப் வியூ உடனான 8MP அல்ட்ரா-வைட் லென்ஸையும் கொண்டிருக்கும் என்பதை பிளிப்கார்ட் வழியாக வெளியான விவரங்கள் உறுதிப்படுத்துகிறது.

டெலிஃபோட்டோ மற்றும் அல்ட்ராவைடு சென்சார்களின் அளவுகள் குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில் உள்ள 50எம்பி வைட்-ஆங்கிள் மற்றும் 2எம்பி டெப்த் சென்சாருடன் ஒப்பிடும்போது, ​​இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆனது இதன் விலைப்பிரிவில் முதன்முதலில் வந்த டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஷார்ப் ஆன ஜூம்-இன் ஷாட்களை உறுதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக்கள் நத்திங் போன் 3ஏ ப்ரோவின் டெலிஃபோட்டோ திறமையுடன் பொருந்தவில்லை என்றாலும், பட்ஜெட்டை மையமாகக் கொண்ட பயனர் தளத்திற்கு இதுவே ஒரு பெரிய விஷயமாக இருக்கும். முன்னரே குறிப்பிட்டபடி சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ (MediaTek Dimensity 7300 Pro) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை சிஎம்எப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனில் டைமன்சிட்டி 7300 (Dimensity 7300) சிப்செட் இருந்தது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப் ஆனது 6வது ஜெனரஷன் என்பியு-வை பயன்படுத்தும் என்றும், இது 4.8 டாப்ஸ் ஏஐ செயல்திறன், பிஜிஎம்ஐ-யில் 120 பிரேம்ஸ் பெர் செகண்ட் கேமிங், நெட்வொர்க்கில் 53% மேம்பாடுகள் மற்றும் 1000 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆகியவற்றை வழங்கும் என்றும் சிஎம்எப் நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் பிரிக் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் சிஎம்எப் எவ் ம் உறுதி செய்யப்பட்டு இருந்தது. ரீடெயில் பாக்ஸில் சார்ஜர்களை இலவசமாக அனுப்பாமல், அதை தனியாக பணம் செலுத்தி வாங்குங்கள் என்று கூறுவதற்கு பெயர் பெற்ற ஸ்மார்ட்போன் பிராண்டு ஆன 'சிஎம்எப் பை நத்திங்' நிறுவனம் ஆனது, ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகமாகும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் பிரிக் இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Phone 2 Pro Packs 50MP Telephoto Lens Rare Camera hardware in Mid Range Segment
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X