Home
Mobile

புது போன் வாங்குற ஐடியா இருந்தா.. அப்படியே நிறுத்துங்க.. CMF Phone 2 Pro இந்திய அறிமுகம் தேதி அறிவிப்பு!

நத்திங் நிறுவனத்தை போலவே அதன் துணை நிறுவனமான சிஎம்எப்பும் கூட கொஞ்சம் "முன்-பின்" ஆகத்தான் செயல்படும் என்பதை நிரூபித்துள்ளது. கடந்த மார்ச் 2025 இல், நத்திங் நிறுவனம் அதன் ஹை-எண்ட் மாடல் ஆன நத்திங் போன் 3 மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்நிறுவனம் அதன் பட்ஜெட் விலை மாடல்கள் ஆன நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோவை அறிமுகம் செய்திருந்தது.

தற்போது சிஎம்எப் நிறுவனம், அதன் சிஎம்எப் போன் 2 மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்நிறுவனம் அதன் சிஎம்எப் போன் 2 ப்ரோ மாடலின் அறிமுக தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 28 ஆம் தேதியன்று இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CMF Phone 2 Pro இந்திய அறிமுகம் தேதி அறிவிப்பு!

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். புதிய ஸ்மார்ட்போனுடன் சேர்த்து சிஎம்எப் நிறுவனம் ஆனது சிஎம்எப் பட்ஸ் 2 (CMF Buds 2), சிஎம்எப் பட்ஸ் 2ஏ (CMF Buds 2a) மற்றும் சிஎம்எப் பட்ஸ் 2 பிளஸ் (CMF Buds 2 Plus) ஆகியவற்றை உள்ளடக்கிய அதன் புதிய ட்ரூ-வயர்லெஸ்-ஸ்டீரியோ இயர்பட்ஸ் சீரீஸையும் அறிமுகம் செய்யும்.

முன்னதாக (இது சிஎம்எப் போன் 2 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்த்த நேரத்தில்) வெளியான டீசர்கள் வழியாக, சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேக் பேனலை (Back Panel) வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. அந்த டீஸரின் படி, சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது புதிய மேட் பினிஷ் (Matte finish) உடன் வரக்கூடும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

எக்ஸ் தளம் வழியாக ஒரு சுருக்கமான வீடியோவாக பகிரப்பட்ட டீஸரில், சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆனது பிளாஸ்டிக் எட்ஜ்கள் (Plastic Edges) மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட பேக் பேனல் (Redesigned rear pane) மற்றும் ஒரு ஸ்க்ரு (Screw) ஆகியவற்றை காட்டுகிறது. டீஸர் வீடியோ வழியாக மேட் பினிஷ உடன் கூடிய பளபளப்பான பேக் பேனலை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

ஆனாலும் பேக் பேனல் எந்த பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்கள் வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலும் இது பிளாஸ்டிக் அல்லது அலுமினியத்தால் (Aluminium) செய்யப்படலாம். தற்போதைய ஜெனரேஷன் மாடலில் (அதாவது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில்) பாலிகார்பனேட் பேக் பேனல் (Polycarbonate rear panel) உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கடைசியாக வெளியான டீஸர் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் கீழ் இடது பக்கத்தில் சிஎம்எப் பை நத்திங் (CMF by Nothing) லோகோவையும் காண முடிகிறது. இது வெவ்வேறு கோணங்களில் வைத்திருக்கும் போது ஒளி வீசும் லோகோவாக அல்லது இருண்ட லோகோவாக தோன்றுகிறது.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக வெளியான டீசர் வழியாக சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சிஎம்எப் நிறுவனத்தின் சிக்னேச்சர் ஆரஞ்சு கலர் பேக் பேனலையும் (Orange Color Back Panel), சிங்கிள் ரியர் கேமரா செட்டப்பையும் (Single Rear Camera Setup) பெற்று இருப்பதை காண முடிந்தது.

அதாவது இது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த டூயல் ரியர் கேமரா செட்டப்பில் (Dual Rear Camera Setup) இருந்து விலகி சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் ரியர் கேமரா செட்டப்பிற்குள் (Single Rear Camera Setup) நுழைகிறது. மேலும் கேமரா சென்சார் ஆனது ரியர் பேனலில் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது; கேமராவிற்கான ஃபிளாஷ் சென்சாருக்கு கீழே வைக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Phone 2 Pro India Launch Date Confirmed April 28 What We can Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X