ஏப்.28 குள்ள ஓவரா ஹைப் ஏத்தி வாங்க வச்சிடுவானுங்க போலயே.. CMF Phone 2 Pro குறித்து புதிய அப்டேட்!
சிஎம்எப் (CMF) நிறுவனத்தின் 2வது ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி அதன் சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது
அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, சிஎம்எப் நிறுவனம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் டிசைன், கேமராக்கள் மற்றும் பிற அம்சங்கள் பற்றிய முக்கிய விவரங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி வருகிறது. அப்படியாக இந்த வாரம், சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் எசன்ஷியல் ஸ்பேஸ் அம்சம் இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்ட வேகத்தில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர்களில் டூயல்-டோன் பேக் பேனலுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேக் பேனலின் மேல் பாதி ஆனது லைட்டர் ஷேட்-ஐ கொண்டுள்ளது, அதே நேரத்தில் கீழ் பாதி டார்க் ஷேட்-ஐ கொண்டுள்ளது. கூடவே பேக் பேனலில் நான்கு ஸ்க்ரூ பாயிண்ட்களையும் காண முடிகிறது. இது பயனர்கள் ஸ்டாண்ட், கார்டுஹோல்டர் அல்லது லேன்யார்டு போன்ற ஆக்சஸெரீஸ்களை கனெக்ட் செய்ய பேனலை அகற்ற அனுமதிக்கும்.
கடைசியாக சிஎம்எப் (CMF) பிராண்டிங் மற்றும் சான்றிதழ் மதிப்பெண்கள் ஸ்மார்ட்போனின் கீழ் பாதியில் வைக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது முந்தைய மாடலை போலவே அதாவது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனை போலவே சிஎம்எப் போன் 2 ப்ரோ மாடலின் ரீடெயில் பாக்ஸிலும்ஒரு ஸ்க்ரூடிரைவரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த இமேஜிங் செயல்திறன் குறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டது. சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்டுடன் இணைந்து மிட்-ரேன்ஜ் வரம்பில் ஒரு அரிய கேமரா ஹார்ட்வேர் ஆன டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டுள்ளது.
இந்த அப்கிரேட்கள் வழியாக சிஎம்எப் நிறுவனம் இந்த ஸ்மார்போனிற்கான பெயரில் உள்ள ப்ரோ என்கிற வார்த்தைக்கு பலம் சேர்ந்துள்ளன என்றே கூறலாம். சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1/1.57-இன்ச் சென்சார் உடனான 50எம்பி வைட் ஆங்கிள் லென்ஸையும், 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸையும், 119.5° பீல்ட் ஆப் வியூ உடனான 8MP அல்ட்ரா-வைட் லென்ஸையும் கொண்டிருக்கும்.
சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில் உள்ள 50எம்பி வைட்-ஆங்கிள் மற்றும் 2எம்பி டெப்த் சென்சாருடன் ஒப்பிடும்போது, இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆனது இதன் விலைப்பிரிவில் முதன்முதலில் வந்த டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஷார்ப் ஆன ஜூம்-இன் ஷாட்களை உறுதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த மார்ச் 4 ஆம் தேதி நத்திங் போன் 3ஏ சீரீஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஐ அடிப்படையிலான எசன்ஷியல் ஸ்பேஸ் (Essential Space) அம்சமானது சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்பதையும், இதற்காக ஒரு பிரத்யேக பட்டன் இருக்கும் என்பதையும் சிஎம்எப் பை நத்திங் (CMF by Nothing) உறுதிப்படுத்தியுள்ளது. எக்ஸ் தளம் வழியிலான ஒரு பதிவில், பயனர்கள் சிஎம்எப் போன் 2 ப்ரோவில் தங்கள் "இரண்டாவது மெமரி" ஆன எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது.
நத்திங் போன் 3ஏ சீரீஸ்-ஐ போலவே, இது பவர் பட்டனுக்கு அடுத்ததாக, ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் அமைந்துள்ள ஒரு பிரத்யேக "எசன்ஷியல் கீ" (Essential key) மூலம் செயல்படுத்தப்படும். இது செயல்படுத்தப்பட்டதும், எசன்ஷியல் ஸ்பேஸ் ஆனது ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற அனைத்து வகையான டேட்டாவையும் சேகரித்து, ஏஐ-ஐ பயன்படுத்தி அவற்றை நினைவுபடுத்துவதற்கான ஒன்-ஸ்டாப் சொல்யூஷனாக செயல்படும்!


Click it and Unblock the Notifications