CMF Phone 2 Pro 5G மீது திடீர் விலை குறைப்பு.. அசல் விலை என்ன, ஆபர் விலை என்ன?
பலரும் நத்திங் (Nothing) நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன்கள் ஆன நத்திங் போன் 4ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீது ஒரு கண் வைத்திருக்கும் நேரத்தில்.. நத்திங்கின் துணை நிறுவனமான சிஎம்எப் பிராண்டின் மீதும் சிலர் ஒரு கண் வைத்து இருக்கிறார்கள்.
ஆனால் இப்போதைக்கு சிஎம்எப் நிறுவனத்திடம் இருந்து எந்த புதிய ஸ்மார்ட்போன்களும் வராது என்பது போல் தெரிகிறது. ஆக விலை குறைக்கப்பட்ட அல்லது ஆபர் அல்லது வங்கி தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் பழைய சிஎம்எப் மாடல்களின் மீது கவனம் செலுத்துவது நல்லது. அப்படி இரு மாடல் தான் சிஎம்எப் போன் 2 ப்ரோ 5ஜி.

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் சிஎம்எப் போன் 2 ப்ரோ 5ஜி (CMF Phone 2 Pro 5G) ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.1000 விலை குறைப்பை பெற்று ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.2 கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது
இதன் டிஸ்பிளேவில் 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM ப்ரெக்வன்சி, 387ppi பிக்சல் டென்சிட்டி, 480Hz டச் சாம்ப்ளிங் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், HDR10+ ஆதரவு மற்றும் பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் ஆகிய அம்சங்களும் அடக்கம்.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ரேம் பூஸ்டர் அம்சத்தின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்கவும் முடியும். மேலும் 2டிபி வரை மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜூம் உள்ளது
கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப்/1.88 மற்றும் இஐஎஸ் ஆதரவு உடன் 50 மெகாபிக்சல் 1/1.57-இன்ச் சென்சார்+ எப்/1.88 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. இதன் டெலிஃபோட்டோ கேமராவில் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூமிங் திறன் உள்ளது
முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 33W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரீடெயில் பாக்ஸ்-ல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் ஒரு கேஸ் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
சிஎம்எப் போன் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 5ஜி ஆதரவு, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட், ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங், இரண்டு மைக்ரோஃபோன்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற டேட்டாவை அணுக உதவும் புதிய எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ விரைவாக அணுக அனுமதிக்கும் ஒரு எசன்ஷியல் பட்டன் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








