குறுக்க இந்த கௌசிக் வந்தா.. சைக்கிள் கேப்புல Nothing-ன் சைட் கம்பெனி பார்த்த வேலை! பட்ஜெட் விலையில் புது போன்!
மெயின் நிறுவனமான நத்திங் (Nothing) வருகிற மார்ச் 4 ஆம் தேதியன்று அதன் நத்திங் போன் 3ஏ சீரீஸ் (Nothing Phone 3a Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில்.. நத்திங்கின் சைட் நிறுவனமான சிஎம்எப்-ன் (CMF) அதன் அடுத்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் "கிட்டத்தட்ட" உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தில் (Bureau of Indian Standards - சான்றிதழ் தளம்) புதிய சிஎம்எப் ஸ்மார்ட்போன் ஒன்று காணப்பட்டுள்ளது. அது சிஎம்எப் போன் 2 (CMF Phone 2) மாடல் ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதன் மூலம், சிஎம்எப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடல் ஆனது கடந்த ஜூலை 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், அதன் அப்கிரேடட் வெர்ஷன் ஆன சிஎம்எப் போன் 2 ஆனது இந்தியாவில் முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் கொண்டு இயங்கலாம் மற்றும் இது ப்ளூ கலர் ஆப்ஷனில் வரலாம் என்பதை தவிர்த்து வேறு எந்த விவரங்களும் இல்லை. எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ19,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
நினைவூட்டும் வண்ணம் சிஎம்எப் போன் 1 மாடலின் ஆரம்ப விலை ரூ.15,999 ஆக இருந்தது.சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது பழுதுபார்த்தல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாக கொண்ட மிகவும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது.இது எச்டிஆர் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிரகாசமான ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
இது 33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இது ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது இஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது. இதேபோன்ற முக்கிய அம்சங்களை நாம் சிஎம்எப் போன் 2 மாடலிலும் எதிர்பார்க்கலாம்.
நத்திங் போன் 3ஏ சீரீஸ் அறிமுகத்தை பொறுத்தவரை, இதன்கீழ் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகமாகும். இரண்டிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு கேமரா செட்டப்பில் (Camera Setup) இருக்கும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் AMOLED டிஸ்பிளே, தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்புக்கான ஐபி64 ரேட்டிங், 5000mAh பேட்டரி, 50எம்பி மெயின் கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ராவைட் ஆகிய பொதுவான அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டிற்கும் இடையேயான உண்மையான மற்றும் முக்கியமான வித்தியாசம் - மூன்றாவது கேமராவில் இருக்கும். நத்திங் நிறுவனம் முதல் முறையாக அதன் ஸ்மார்ட்போன்களில் பிரத்யேகமாக டெலிஃபோட்டோ லென்ஸை (Telephoto Lens) சேர்கிறது. ஆனால் இரண்டு மாடல்களிலும் இதன் செலயல்பாடுகள் மாறுபடும். அதாவது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் 2ஸ்க்ஸ் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் ப்ரோ வேரியண்ட்டில் சோனியின் Lytia LYT-600 சென்சார் உடன், அதிக திறன் கொண்ட 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் ஆதரவு (Optical Zooming Support) இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ப்ரோ மாடலுக்கு ஜூம் ஷாட்கள் மற்றும் போர்ட்ரெய்ட் புகைப்படம் எடுக்கும் திறனை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றும்.


Click it and Unblock the Notifications








