மிரட்டி விட்டாங்க.. வெறும் ரூ.20000 பட்ஜெட்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
எந்த போனை பார்த்தாலும் ஒரே மாதிரியா இருக்கே, புதுசா ஏதாவது டிசைனில் கிடைச்சா கண்டிப்பா வாங்கனும் என்று பலருக்கு தோன்றி இருக்கலாம். அப்படிப்பட்ட ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு கஸ்டமைசபிள் பேக் பேனல் டிசைன், மல்டிபிள் அட்டாச்மெண்ட் ஆப்ஷன்கள் மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற பக்கா பீச்சர்களுடன் ரூ.20000 பட்ஜெட்டுக்குள் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) வெளியாக இருக்கிறது. இந்த போன் குறித்த விவரங்கள் இதோ.
நத்திங் மாடல்களின் வருகைக்கு பிறகு புதுவித டிசைனுக்கு ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே இருக்கும் வரவேற்பை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தெரிந்து கொண்டன. ஆகவே, இப்போது வரும் போன்களில் பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் ஏதாவது புதிதாக பார்க்க முடிகிறது. இந்த வரிசையில், ஒட்டுமொத்த மார்கெட்டும் மிரளும் டிசைனில் சிஎம்எப் போன் 1 போன் வெளியாகிறது.

கஸ்டமைசபிள் டிசைன் மற்றும் மல்டிபிள் அட்டாச்மெண்ட் ஆப்ஷன்களுடன் இந்த போன் வெளியாகிறது. அதாவது, இந்த சிஎம்எப் போன் 1 மாடலின் பேக் பேனலானது கலட்டி மாட்டிக்கொள்ளும் ஆப்ஷனுடன் வருகிறது. ஆகவே, கிரே (Grey), ப்ளூ (Blue), லைட் கிரீன் (Light Green) மற்றும் ஆரஞ்ச் (Orange) ஆகிய மல்டிபிள் கலர்களில் பேக் பேனலை மாற்றிக் கொள்ளலாம்.
இதுமட்டுல்லாமல் கிக்ஸ்டேன்ட் (Kickstand) மற்றும் ஹூக் அட்டாச் ஸ்ட்ராப் (Hook Attach Strap) போன்றவை வருகின்றன. இந்த பேக் பேனலை ஸ்குரூவ்டிரைவர் (Screwdriver) மூலம் கலட்டி கொள்ளும்படி ஸ்குரூவ் பில்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, எளிதாக போனின் கலரை சேஞ்ச் செய்து கொள்ளலாம். புதுவித டிசைனிலும் பிரீமியம் லுக்கிலும் தட்டித் தூக்குகிறது.
இந்த சிஎம்எப் போன் 1 மாடலுக்கான எதிர்பார்க்கை எகிற வைத்தற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. ஏனென்றால், இந்த போன் ரூ.20000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. வரும் ஜூலை 8ஆம் தேதி இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இப்போது பீச்சர்களை பார்ப்போம்.

சிஎம்எப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 Specification): இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி எஸ்ஓசி (MediaTek Dimensity 7300 5G SoC) சிப்செட் வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே வருகிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வரலாம்.
இந்த போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் வருகிறது. பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers) கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் சோனி சென்சார் மற்றும் 2X இன்-சென்சார் ஜூமிங் வருகிறது.
16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த பீச்சர்களை மட்டுமே சிஎம்எப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வரும் நாட்களில் மீதமுள்ள அம்சங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. பிரீமியம் லுக், பக்காவான பீச்சர்கள் மட்டுமல்லாமல், புதுவித பில்ட் பாடி கொண்ட இந்த சிஎம்எப் போன் 1 மாடலுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications








