Home
Mobile

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

வாங்குனா இந்த போன்தான் வாங்குவோம், என்று சொல்லும்படி புதுவிதமான டிசைனில் வெளியாகும் போன்களில் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலானது, மிகப்பெரும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது. ஹேண்டி டிசைன், லெதர் பேனல் மட்டுமல்லாமல், கேமரா, சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த பீச்சர்கள் அனைத்தும் பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதால், வெயிட் செய்து வாங்கும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இந்த சிஎம்எப் போன் 1 மாடலின் கேமரா பீச்சர்கள் இப்போது வெளியாகியிருக்கிறது.

இந்த போன் வரும் ஜூலை 8ஆம் தேதி இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் டிசைன் மற்றும் சில பீச்சர்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பீச்சர்களில் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் சென்சார் இப்போது இடம் பெற்றுள்ளது.

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்!

கம்மியான பட்ஜெட்டில் சோனி சென்சாருடன் வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. இந்த சென்சாருடன் பல பட்ஜெட் போன்கள் வந்தாலும், டிசைனில் இந்த சிஎம்எப் போன் 1 மாடலானது, மற்ற போன்களை தூக்கிசாப்பிடும்படி இருக்கிறது. இதுவரையில் வெளியான பீச்சர்கள் மற்றும் மார்கெட்டில் கசிந்த விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சிஎம்எப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 Specification): இந்த சிஎம்எப் போனில் 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. மேலும், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இதுவொரு பிளாட் டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, டிஸ்பிளேவில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். பஞ்ச்-ஹோல் கேமரா (Punch-hole Camera) வருகிறது. பிங்கர்பிரிண்ட் ஆன் டிஸ்பிளே (Fingerprint On Display) கொண்டிருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி எஸ்ஓசி (MediaTek Dimensity 7300 5G SoC) சிப்செட் வருகிறது.

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்!

ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த சிஎம்எப் போன் 1 மாடலை எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஸ் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. மெமரி வேரியண்ட் குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனால், மைக்ரோஎஸ்டி வருவது உறுதியாகிவிட்டது.

இந்த சிஎம்எப் போன் 1 மாடலில் 5000mAh பேட்டரி வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் பற்றிய தகவல்கள் இல்லை. யுஎஸ்பி டைப்-சி போர்ட் வருகிறது. பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers), மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த பீச்சர்களோடு கேமரா பீச்சர்கள் சேர்ந்துள்ளது.

இந்த சிஎம்எப் போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி சென்சார் வருகிறது. இது எல்ஒய்டி அல்லது ஐஎம்எக்ஸ் சென்சாராக இருக்க வாய்ப்புள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த மெயின் கேமராவில் 2X இன்-சென்சார் ஜூமிங் வருகிறது.

மேற்கூறிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்த சிஎம்எப் போன் 1 போனின் ஆரம்ப விலை ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, கம்மியான பட்ஜெட்டில் புதுவித டிசைன் கொண்ட போன்களில் இது நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Phone 1 With 50MP Camera, 16GB RAM To Launch July 8 Sale From Flipkart Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X