இப்படி ஒரு போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன சிஎம்எஃப் (CMF) விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் வரும் ஜூலை 8-ம் தேதி இந்தியாவில் சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) எனும் போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் 50எம்பி கேமரா, மீடியாடெக் சிப்செட், 33 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த சிஎம்எஃப் போன் 1. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே சற்று வரிவாகப் பார்க்கலாம்.

சிஎம்எஃப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (2000 nits peak brightness), எச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட் (HDR10+ support) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) வசதியுடன் இந்த புத்தம் புதிய சிஎம்எஃப் போன் 1 வெளிவரும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சிஎம்எஃப் போன் 1 இந்தியாவுக்கு வரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கும் சிஎம்எஃப். அதேபோல் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) உள்ளதாக கூறப்படுகிறது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சிஎம்எஃப் போன் 1 விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 2டிபி மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சிஎம்எஃப் போன் 1 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதி இதில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் சிஎம்எஃப் போன் 1 அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே நாள் முழுவதும் இந்த போன் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (3W fast charging) வசதியும் உள்ளது. வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
சிஎம்எஃப் போன் 1 இந்தியாவில் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த புதிய போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications