Home
Mobile

சொன்னத விட ரூ.4000 கம்மி.. ஆர்டர் சும்மா தெறிக்க போகுது.. CMF Phone 1-ஐ நம்பி வாங்கலாமா?

சிஎம்எஃப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) மாடலின் விலை நிர்ணயத்தில்.. தொடர்ந்து நிலவி வந்த குழப்பம் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் இது ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வரும் என்று கூறப்பட்டது. பின்னர் சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் எம்ஆர்பி வெளியாகி, இது ரூ.20,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகுமெஎன்று கூறப்பட்டது. தற்ப்போது சிஎம்எஃப் நிறுவனம் சிஎம்எஃப் போன் 1-ன் சிப்செட்டை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததன் விளைவாக, இது என்ன விலைக்கு வருமென்பதை வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது.

யுகே-அடிப்படையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான சிஎம்எஃப் பை நத்திங் என்பது, அதன் பெயர் குறிப்பிடுவது போலவே நத்திங் நிறுவனத்தின் சப்-பிராண்ட் ஆகும். இது அதன் முதல் ஸ்மார்ட்போனான சிஎம்எஃப் போன் 1-ல் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5(ஜி MediaTek Dimensity 7300 5G) சிப்செட் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியள்ளது.

சொன்னத விட ரூ.4000 கம்மி.. CMF Phone 1-ஐ நம்பி வாங்கலாமா?

இந்த சிப்செட் டிஎஸ்எம்சி (TSMC) ஆல் 4என்எம் ப்ராசஸ்-ல் கட்டமைக்கப்பட்ட 8-கோர் ப்ராசஸர் (8-core Processor built on a 4nm Process) ஆகும். ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) அல்லது டைமென்சிட்டி 7050 (Dimensity 7050) போன்ற குறைந்த சக்தி வாய்ந்த சிப்செட்கள் ஆனது பெரும்பாலும் ரூ.20,000 க்கும் குறைவான விலை வரம்பில் (Under Rs.20000 Budget) உள்ள ஸ்மார்ட்போன்களில் தான் பேக் செய்யப்படும்.

அதன் அடிப்படையில் பார்த்தால் (சிஎம்எஃப் நிறுவனம் அதன் சிஎம்எஃப் போன் 1-ன் அதிகாரப்பூர்வ விலையை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் கூட) இது ரூ.20,000 க்குள் என்கிற விலை வரம்பில் அறிமுகமாகும் என்றும், சில வங்கி சலுகைகளுக்கு (Bank Offers) பின்னர் இது சுமார் ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சொன்னத விட ரூ.4000 கம்மி.. CMF Phone 1-ஐ நம்பி வாங்கலாமா?

இந்த விலை கடைசியாக லீக் ஆன ரீடெயில் பாக்ஸ் எம்ஆர்பி விலையை (Retail Box MRP Price) விட ரூ.4000 குறைவாக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் பிரார் பகிர்ந்த எக்ஸ் தள பபதிவின்படி, சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ரீடெயில் பாக்ஸ் எம்ஆர்பி ஆனது ரூ.19,999 ஆகும்.

வேறு எந்த ஸ்மார்ட்போனை போலவும், சிஎம்எஃப் போன் 1 அதன் எம்ஆர்பி விலைக்கே விற்பனைக்கு வராது என்பதால், ரீடெயில் பாக்ஸ்-ல் உள்ள விலையை விட சற்று குறைவான விலைக்கு தான் வாங்க கிடைக்கும் என்று அப்போதே நாங்கள் எதிர்பார்த்தோம். அதன்படியே சிஎம்எஃப் போன் 1 ஆனது ரூ.15,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சொன்னத விட ரூ.4000 கம்மி.. CMF Phone 1-ஐ நம்பி வாங்கலாமா?

சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? தற்போது வரையிலாக சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் அமோஎல்இடி டிஸ்பிளே (AMOLED Display) விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் / விவரக்குறிப்புகள் பற்றி சிஎம்எஃப் நிறுவனம் இன்னும் வாய் திறக்கவில்லை.

சிஎம்எஃப் போன் 1 குறித்த அதிகாரப்பூர்வ டீஸர்கள் வழியாக, இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனில் திருகு (Screw ஒன்றை காண முடிகிறது. இது ரிமூவபிள் பேக் பேனல் (Removable Back Panel) ஆக இருக்குமா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. ஆனால் இது நிச்சயம் வித்தியாசமான வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சொன்னத விட ரூ.4000 கம்மி.. CMF Phone 1-ஐ நம்பி வாங்கலாமா?

மேலும், ஸ்னாப்டிராகன் 782ஜி, டைமென்சிட்டி 7050 மற்றும் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 ஆகியவற்றை விட டைமன்சிட்டி 7300 சிப்செட் ஆனது சிறப்பாக செயல்படுவதாக எர்லி பென்ச்மார்க்குகள் (Early Benchmarks) தெரிவிக்கின்றன, இது சிஎம்எஃப் போன் 1 பயனர்களுக்கு "ஒப்பீட்டளவில்" மென்மையான செயல்திறனை (Smooth Performance) வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் சிஎம்எஃப் போன் 1 எப்போது அறிமுகமாகும்? இது வருகிற ஜூலை 8 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இந்த வெளியீட்டு நிகழ்வானது சிஎம்எஃப்.டெக் வலைத்தளம் (cmf.tech website) வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்நிகழ்ச்சியில் சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) என்கிற புதிய ஸ்மார்ட்வாட்ச் மற்றும் சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ 2 (CMF Buds Pro 2) என்கிற புதிய இயர்போன்களும் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Phone 1 Targets Sub Rs 20000 Segment Because Its Confirmed MediaTek Dimensity 7300 SoC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X