போட்டிபோட்டு வாங்குறாங்க.. சோனி கேமரா.. 33W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
நத்திங்(Nothing) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன சிஎம்எப் (CMF) நிறுவனம் சமீபத்தில் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் சிஎம்எஃப் போன் 1 மூன்று மணி நேரத்தில் பல்வேறு சேனல்களில் 100,000 யூனிட்டுகளுக்கு (1 லட்சம்) விற்பனை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக நத்திங் போன்(2a) இந்த சாதனையை அடைய 24 மணிநேரம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிஎம்எப் போன் 1 ஆனது தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்ததால் நல்ல வரவேற்பு உள்ளது. இப்போது சிஎம்எப் போன் 1 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சிஎம்எப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 ×1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 960Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (960Hz PWM dimming) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சிஎம்எப் போன்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சிஎம்எப் போன் 1 வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
Nothing OS 2.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) வசதிகளும் இந்த போனில் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கறி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது சிஎம்எப் போன் 1. மேலும் 5000எம்ஏச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C) உள்ளிட்ட கனெக்ட்டிவிட்டி உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சிஎம்எப் போன் 1 விலை 15,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,999-ஆக உள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே ரூ.14,999 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








