ரூ.20000-க்கும் கம்மி.. 50எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் CMF போன்.. எந்த மாடல்?
நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்ட் சிஎம்எஃப் (CMF) ஆனது வரும் ஜூலை 8-ம் தேதி இந்தியாவில் சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் உடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) மாடலின் விலை ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) மாடல் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இப்போது இந்த புதிய அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

சிஎம்எஃப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்(MediaTek Dimensity 7300 SoC) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனின் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சிஎம்எஃப் போன் 1 இந்தியாவுக்கு வரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கும் சிஎம்எஃப். அதேபோல் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) உள்ளது.
குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) கொண்டுள்ளது இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (2000 nits peak brightness), எச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட் (HDR10+ support) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
சிஎம்எஃப் போன் 1 ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது. அதேபோல் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
சிஎம்எஃப் போன் 1 ஆனது இந்தியாவில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 2டிபி மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சிஎம்எஃப் போன் 1 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications








