Home
Mobile

கழட்டி மாட்டும் பேக் பேனல்.. கற்பனைக்கு எட்டாத கம்மி விலை.. CMF Phone 1-ன் விலை, அம்சங்கள், விற்பனை தேதி!

நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன சிஎம்எப் (CMF) நிறுவனம், நாளை, அதாவது ஜூன் 8 ஆம் தேதியன்று, அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த சில நாட்களாக சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலைப்பாட்டில்.. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.

சுவாரசியமாக சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் விலை நிர்ண்யம் ஆனது, அதன் அதிகாரப்பூர்வ செல்லர் ஆன பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக லீக் ஆகியுள்ளது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @himawanth8 (எக்ஸ் தளம்), பிளிப்கார்ட் ஆல் நடத்தப்படும் யூட்யூபில் ஒரு மினி பேனர் விளம்பரை பார்த்துள்ளார்.

CMF Phone 1-ன் விலை, அம்சங்கள், விற்பனை தேதி!

அது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த மினி பேனர் விளம்பரத்தின்படி, சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.17,999 க்கு அறிமுகமாகும். ஆனால் அறிமுக தள்ளுபடிக்கு பிறகு அதன் விலை ரூ.14,999 ஆக குறைக்கப்படும். இங்கே தள்ளுபடி என்று குறிப்பிடப்படுவது எக்ஸ்சேன்ஜ் போனஸ் மற்றும் வங்கி / கார்டு டிஸ்கவுண்ட் ஆக இருக்கலாம்.

சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தையும், அதன் மீது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக தள்ளுபடியையும் பார்க்கும் போது.. நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனில் கையாளப்பட்ட அணுகுமுறை தான் நினைவிற்கு வருகிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2ஏ ஆனது ரூ.19,999 என்கிற அறிமுக விற்பனை விலைக்கு வெளியானது. ஆனால் இப்போது ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் யூட்யூப்பில் காணப்பட்ட மினி பேனர் விளம்பரமானது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது எப்போது முதல் விற்பனைக்கு வரும் என்கிற தேதியையும் உறுதிப்படுத்துகிறது. அந்த பேனரின் படி, சிஎம்எப் போன் 1-க்கான முதல் விற்பனை ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5(ஜி MediaTek Dimensity 7300 5G) சிப்செட் இடம்பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிப்செட் டிஎஸ்எம்சி (TSMC) ஆல் 4என்எம் ப்ராசஸ்-ல் கட்டமைக்கப்பட்ட 8-கோர் ப்ராசஸர் (8-core Processor built on a 4nm Process) ஆகும்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் இடம்பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 5000mAh பேட்டரியுடன் வரலாம். இந்த ஸ்மார்ட்போனின் மிகவும் தனித்துவமான அம்சம் - கஸ்டமைஸ் செய்யப்படக்கூடிய அதன் பேக் பேனல் ஆகும். ஒருவர் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலை அகற்றிவிட்டு, அதை கருப்பு, நீலம், வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் மாற்றக்கூடிய பின் பேனல்களை கொண்டு மாற்றலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 6.7 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளேவாக இருக்கலாம். மேலும் இது 120ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனும் வரலாம்.

சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் லீக்டு ப்ரைஸ்-எ பார்க்கும்போது, இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஒரு விளையாகவே தோன்றுகிறது. தனித்தனியாக விற்கப்படும் மாற்றக்கூடிய பேக் பேனல்களின் விலைகளும் மிகவும் மலிவானதாக இருந்தால்.. இந்நாள் வரையிலாக தாறுமாறாக விற்பனை ஆகும் நத்திங் போன் 2ஏ மாடலை போலவே சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் நல்ல விற்பனையை காணும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Best Mobiles in India

English summary
CMF Phone 1 Price Offer Flipkart Sale Date Leaked Ahead India Launch on July 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X