ஆளுக்கு 1 ஆர்டர்.. சோனி கேமரா.. 33W சார்ஜிங்.. 128ஜிபி மெமரி... ஆஃபரில் சிஎம்எப் போன்..
சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது சிஎம்எப் போன் 1 மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சிஎம்எப் போன் 1 மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும்.

சிஎம்எப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 Specifications): தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் இந்த சிஎம்எப் போன் 1 வெளிவந்தது. பின்பு மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சிஎம்எப் போன்.
அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வசதி இந்த போனில் உள்ளது. 2400 ×1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 960Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (960Hz PWM dimming) உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும்.
குறிப்பாக Nothing OS 2.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் சிஎம்எப் போன் 1 வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும். இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) வசதிகளும் இந்த சிஎம்எப் போனில் உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சிஎம்எப் போன் 1 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கறி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சிஎம்எப் போன் 1. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது சிஎம்எப் போன் 1. மேலும் 5000எம்ஏச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C) உள்ளிட்ட கனெக்ட்டிவிட்டி இதில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








