முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்த விலையில் CMF போன் விற்பனை.. நம்பி வாங்கலாமா?
நத்திங் நிறுவனம் அதன் 2025 ஆம் ஆண்டின் முதல் வெளியீட்டு நிகழ்விற்காக தயாராகி வரும் நிலையில், நத்திங்கின் துணை நிறுவனமான சிஎம்எப் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் ஸ்மார்ட்போன் ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மலிவான (தள்ளுபடி) விலையில் வாங்க கிடைக்கிறது.
தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் ஓஎம்ஜி ஒன்லி கேஜெட்ஸ் விற்பனையின் கீழ், சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 22% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது.

கூடவே பிஓபி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனை மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் ரூ.2500 பேங்க் ஆபர் கிடைக்கிறது. இப்படியாக சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.12,999 க்கு கொண்டு வர முடியும். உண்மையிலேயே இதுவொரு நல்ல டீல் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? 5 முக்கியமான காரணங்களை முன்வைத்து, இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். முதலாவதாக இது கஸ்டமைபிலிட்டி, பழுதுபார்த்தல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாக கொண்ட மிகவும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இரண்டாவதாக இது எச்டிஆர் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிரகாசமான ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
மூன்றாவதாக இது பட்ஜெட் விலையில் வந்தாலும் இது சிறந்த பேட்டரி லைஃப்பை (33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி) வழங்குகிறது. நான்காவதாக இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் மிகவும் நியாயமான சிப்செட்டை (ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி) பேக் செய்கிறது. ஐந்தாவதாக இது உறுதியான கேமரா இமேஜ் குவாலிட்டியை வழங்குகிறது; இது இஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்ப்பதற்கான சில நியாயமான காரணங்களும் எங்களிடம் உள்ளன. முன்னரே குறிப்பிட்டபடி இதன் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இருக்காது. மேலும் இது மிகவும் சாதாரணமான ஐபி52 ரேட்டிங்கையே கொண்டுள்ளது. கூடவே இதில் மிகவும் சுமாரான சிங்கிள் லவுட் ஸ்பீக்கர் மட்டுமே உள்ளது. கடைசியாக இதன் கேமராவில் இஐஎஸ் ஆதரவு இருந்தாலும் ஓஐஎஸ் ஆதரவு இல்லை.
பிளிப்கார்ட் ஓஎம்ஜி ஒன்லி கேஜெட்ஸ் விற்பனையின் கீழ் கவனிக்க வேண்டிய மற்ற மொபைல் ஆபர்கள்:
நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus): ரூ.22,749 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): ரூ.114,99 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G): ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G): ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro): ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G): ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05): ரூ.6,299 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06): ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 (Infinix Note 40): ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD): ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro Plus): ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G): ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications