வெயிட்டிங் ஓவர்.. CMF Phone 1 ரிலீஸ் உறுதியானது.. கேமரா, ஸ்டோரேஜ், சிப்செட் விபரம்.. விலை இதோ..
வெயிட்டிங் ஓவர் மக்களே. விரைவில் வெறும் ரூ. 12,000 விலையில், ஒரு அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை-பிராண்டான சிஎம்எஃப் (CMF) பிராண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது CMF Phone (1) என்ற பெயருடன் வெளிவரவுள்ளது.
CMF பிராண்டின் கீழ் முதல் ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த மொபைல் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனை நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் போல அறிமுகம் செய்யவுள்ளது. தெரியாதவர்களுக்கு நத்திங் நிறுவனம் சமீபத்தில் அதன் சிஎம்எஃப் (CMF) என்ற துணை பிராண்டை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த பிராண்டு பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போன் - CMF Phone (1) Smartphone:
இந்த பிராண்டின் கீழ் நிறுவனம் இதுவரை TWS இயர்பட்ஸ் (Earbuds), ஹெட்போன்ஸ் (Headphones), ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) மற்றும் கான் சார்ஜ்ர் (GaN charger) போன்ற சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்திருந்தது. இப்போது, CMF பிராண்ட் அதன் முதல் ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளது.CMF அறிமுகம் செய்யவிருக்கும் புதிய சிஎம்எஃப் போன் (1) - CMF Phone (1) ஸ்மார்ட்போன் மலிவு விலை போனாக வெளிவரவிருக்கிறது.
இந்த புது ஸ்மார்ட்போன் 5ஜி விருப்பத்துடன் ரூ. 12,000 விலையில் அறிமுகமாகவுள்ளது என்று லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. நத்திங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் (2a) - Nothing Phone (2a) போல இதுவும் மலிவு விலை விருப்பமாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, நத்திங் போன் 2A இந்தியாவில் ரூ. 23,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
CMF Phone (1) ஸ்மார்ட்போன் சாதனம் 6.5" இன்ச் அளவு கொண்ட எச்டி (HD) டிஸ்பிளேவை (Display) கொண்டிருக்கும். இதன் பாடி முழுமையாக பிளாஸ்டிக் பாடியுடன் (Plastic body) வரும் என்று லீக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. போனின் பாதுகாப்பிற்காக CMF பிராண்ட் கார்னிக் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass Protection) பாதுகாப்பை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

50MP டூயல் ரியர் கேமராவுடன் CMF Phone (1) எப்போது அறிமுகம்?
இந்த புதிய சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போன் சாதனம் முதலில் ஒற்றை பின்பக்க கேமரா (Single camera system) அம்சத்துடன் வெளிவரும் என்று முந்தைய லீக் தகவல் கூறப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய லீக் தகவல் இந்த புதிய ஸ்மார்ட்போன் 50MP கொண்ட டூயல் ரியர் கேமரா அம்சத்தை பெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், முன்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 16MP கேமராவை பெற வாய்ப்புள்ளது.
இந்த புதிய பட்ஜெட் விருப்பமான சிஎம்எஃப் போன் (1) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7200 5ஜி சிப்செட்டில் (Mediatek Dimensity 7200 5G chipset) இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நத்திங் போன் 2a-வில் காணப்படும் அதே சிப்செட் என்பது கவனிக்கத்தக்கது. இது தவிர இந்த புதிய CMF போன் நத்திங் ஓஎஸ் (Nothing OS) உடன் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் 3 வருட ஓஎஸ் அப்கிரேட்டை பெரும்.
இது 4 வருட செக்யூரிட்டி பேட்ச் பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி (Battery) உடன் 33W பாஸ்ட் சார்ஜிங்கை (Fast charging) அம்சத்தை கொண்டிருக்கும். இந்த CMF Phone (1) மொபைல் ஆரஞ்சு (Orange), பிளாக் (Black), க்ரீன் (Green) மற்றும் வெள்ளை (White) நிறத்தில் சந்தைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் அறிமுகம் ஜூலை மாதம் நடைபெறும்.


Click it and Unblock the Notifications








