Home
Mobile

சூப்பர் டூப்பர் போன்.. ரூ.15,000 விலையில் உலக ஃபேமஸ் ஆன புது CMF Mobile.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்..

அந்த வரும், இந்த வருமென்று பல மாதங்களாக வெறும் லீக் மற்றும் டீஸர் தகவல்களை வைத்து நமது ஆர்வத்தை தூண்டி வாங்க சிஎம்எஃப் (CMF) பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் சாதனமான சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) மொபைல் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யாருமே எதிர்பார்த்திடாத வகையில் வெறும் ரூ. 15,999 என்ற விலையில் தற்போது சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் கூடுதல் அக்சஸரீஸ் சாதனங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

ஆம், நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஸ்மார்ட்போன் அக்சஸரீஸ் மீது ஒரு பிராண்ட் கவனம் செலுத்தியுள்ளது என்றால் அது CMF ஆக மட்டுமே இருக்க முடியும். நத்திங் நிறுவனத்திற்கு சொந்தமான சிஎம்எஃப் பிராண்ட் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) சாதனம் கழட்டி மாட்ட கூடிய பேக் கவர் உடன் வருகிறது. இனி போனின் நிறம் பற்றிய கவலையே வேண்டாம்.

சூப்பர் டூப்பர் போன்.. ரூ.15,000 விலையில் உலக ஃபேமஸ் ஆன CMF Mobile..

சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1):

இனி உங்கள் விருப்பம் போல, தோன்றும் நேரத்தில் எல்லாம் சிஎம்எஃப் போன் 1 நிறத்தை நீங்கள் நொடியில் மாற்றிக்கொள்ளலாம். அதேபோல், இத்துடன் நிறுவனம் லான்யார்ட் கேபிள் (lanyard cable), ஸ்டாண்ட் (stand), மற்றும் பேக் வாலெட் (back wallet) போன்ற அக்சஸரீஸ் சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது. சிஎம்எஃப் போன் 1 சாதனத்தை வெறும் போனாக மற்றுமில்லாமல், CMF நிறுவனம் பல பரிமாணங்களில் அதன் புதுமையை புகுத்தி நம்மை திகைப்படைய செய்துள்ளது.

இந்தியாவில் சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனின் ஆரம்ப மாடலான 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.15,999 என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதன் 8GB ரேம் + 1258GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 17,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களும் வரும் ஜூலை 12, 2024 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும்.

இந்த புதிய சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனின் விற்பனை CMF இந்தியா வலைத்தளம், ரீடைல் கடைகள் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் வழியாக வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் சலுகையின் ஒரு பகுதியாக, முதல் நாள் விற்பனையின் போது மட்டும் வாடிக்கையாளர்கள் சிஎம்எஃப் போன் 1 போனின் விலை மீது ரூ. 1000 கூடுதல் தள்ளுபடியை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டூப்பர் போன்.. ரூ.15,000 விலையில் ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன புது CMF Phone 1 Mobile:

ஜூலை 12, 2024 ஆம் தேதி வரை பொறுத்திருக்க முடியாதவர்கள் ஜூலை 9, 2024 ஆம் தேதி இரவு 7 மணி முதல் பெங்களூரு லூலூ மாலில் உள்ள வளாக கடையிலிருந்து சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) போனை நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) போனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அக்சஸரீஸ் சாதனங்களின் விலை பற்றி பேசுகையில், இந்த போனின் பேக் கவர் ரூ.1,499 விலை முதல் வாங்க கிடைக்கும். இது ஆரஞ்சு, பிளாக், ப்ளூ மற்றும் லைட் க்ரீன் நிறங்களில் கிடைக்கும். இது தவிர மற்ற மூன்று அக்சஸரீஸ் சாதனங்களும் ரூ. 799 விலையுடன் வாங்க கிடைக்கும். CMF இன் 33W சார்ஜ்ர் ரூ. 799 விலையில் வாங்க கிடைக்கும்.

சிஎம்எஃப் போன் 1 சிறப்பம்சம் (CMF Phone 1 Specifications):
- 6.67" இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே (display)
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate)
- மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 chipset)
- 8GB வரை ரேம் (RAM)+ 128GB ஸ்டோரேஜ்
- 2TB மைக்ரோஎஸ்டி மெமரி (microSD memory)
- 50MP + 2MP டூயல் கேமரா
- 16MP செல்பி கேமரா
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 5,000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Phone 1 6GB RAM 128GB Storage 2TB Memory Priced Rs 15999 In India Sale Stars July 12 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X