CMF Phone 2 Pro வந்ததும் அடிமட்ட விலையில் விற்கப்படும் CMF Phone 1 5ஜி மாடல்.. அப்படி என்ன விலை? எங்கே?
நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப்-ன் (CMF) இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) மாடல் ஆனது மே 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் சிஎம்எப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 1 5ஜி (CMF Phone 1 5G) மாடல் ஆனது, க்ரோமா ஆன்லைனில் (Croma Online) ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
க்ரோமா ஆன்லைனில் உள்ள சிஎம்எப் போன் 1 5ஜி ஸ்மார்ட்போனின் போஸ்டர் ஒன்றின்படி இது அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.27,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஆபர் விலையானது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் மீது கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற்ற பிறகு கிடைக்கும் விலை என்று க்ரோமா குறிப்பிட்டுள்ளது.

புதுசு வந்த பின்னர் இந்த பழைய நம்பி வாங்கலாமா? 5 முக்கியமான காரணங்களை முன்வைத்து, இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். முதலாவதாக இது கஸ்டமைபிலிட்டி, பழுதுபார்த்தல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாக கொண்ட மிகவும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இரண்டாவதாக இது எச்டிஆர் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிரகாசமான ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
மூன்றாவதாக இது பட்ஜெட் விலையில் வந்தாலும் இது சிறந்த பேட்டரி லைஃப்பை (33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி) வழங்குகிறது. நான்காவதாக இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் மிகவும் நியாயமான சிப்செட்டை (ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி) பேக் செய்கிறது. ஐந்தாவதாக இது உறுதியான கேமரா இமேஜ் குவாலிட்டியை வழங்குகிறது; இது இஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்ப்பதற்கான சில நியாயமான காரணங்கள்: இதன் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இருக்காது. மேலும் இது மிகவும் சாதாரணமான ஐபி52 ரேட்டிங்கையே கொண்டுள்ளது. கூடவே இதில் மிகவும் சுமாரான சிங்கிள் லவுட் ஸ்பீக்கர் மட்டுமே உள்ளது. கடைசியாக இதன் கேமராவில் இஐஎஸ் ஆதரவு இருந்தாலும் ஓஐஎஸ் ஆதரவு இல்லை.
சிஎம்எப் போன் 2 ப்ரோ விலை மற்றும் விற்பனை விவரங்கள் (CMF Phone 2 Pro Price in India and Sale Details): இந்தியாவில் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக், லைட் க்ரீன், ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். விற்பனை தேதி: மே 5, 2025.
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart), சிஎம்எப் இந்தியா (CMF India) வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனை கூட்டாளர்கள் வழியாக வாங்க கிடைக்கும். சிஎம்எப் போன் 1 மாடலை போலவே புதிய சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனும் யுனிவர்சல் கவர், இன்டர்சேஞ்சபிள் லென்ஸ்கள், வாலட், ஸ்டாண்ட், லேன்யார்டு அல்லது கார்டு ஹோல்டர் (தனித்தனியாக விற்கப்படுகிறது) போன்ற பல்வேறு ஆக்சஸெரீஸ்களுடன் வருகிறது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








