Subscribe to Gizbot

செயற்கை நுண்ணறிவு மிக்க 20எம்பி செல்பீ கேம் கொண்ட ஒப்போ எப்5.!

Written By:

ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம், தொடர்ச்சியான முறையில் செல்பீ அம்சங்கள் மீதான புரட்சிமிக்க தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து, அதை ஸ்மார்ட்போன் உலகின் ஒட்டுமொத்த பாணியையும் மாற்றி அமைக்கிறதென்றால் - அது ஒப்போ நிறுவனமாகத்தான் இருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு மிக்க 20எம்பி செல்பீ கேம் கொண்ட ஒப்போ எப்5.!

தொடர்ந்து சில ஸ்டெல்லர் கேமரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவரும் இந்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்மே முன் எதிர்கொள்ளும் கேமராத்துறையில் தொட்டுப்பார்க்காத எல்லையே இல்லை எனலாம். முற்றிலும் புதிய மற்றும் தனித்துவமான தொழில்நுட்பங்களை செல்பீ கேமராவில் இணைப்பதில் கில்லாடியான ஒப்போ நிறுவனத்தின் அடுத்த லெவல் படைப்பு தான் - ஒப்போ எப் 5.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

செயற்கை நுண்ணறிவு (AI) பியூட்டி தொழில்நுட்பம்.!

பதிவாகும் படத்தின் ஒவ்வொரு பொருளின் தெளிவான மற்றும் இயற்கையான அழகை வழங்குவதற்காக நிறுவனத்தின் மூலம் உருவாக்கம் பெற்றுள்ள சமீபத்திய மற்றும் மிகவும் முன்னேறிய செல்பீ கேமரா தான் - ஒப்போ எப்5. இக்கருவி சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் உதவியின்கீழ் உருவான, செயற்கை நுண்ணறிவு (AI) பியூட்டி தொழில்நுட்பதினுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தெளிவான மற்றும் இயற்கை செல்பீ.?

எவ்வளவு தெளிவான மற்றும் இயற்கை செல்பீ.?

ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் 20எம்பி செல்பீ கேமராவானது, உள்ளமைக்கப்பட்ட ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பியூட்டி தொழில்நுட்ப கொண்டுள்ளது. இது ஒரு முகத்தை 200 முக அங்கீகாரம் புள்ளிகளாக பதிவு செய்யும் திறன் கொண்டது. அதாவது உங்கள் மூக்கு, நெற்றி, கன்னங்கள் அல்லது கீழ் தாடைகள் உட்பட பல்வேறு மென்மையான முக அம்சங்களை ஆராய்ந்து உங்களுக்கே ஏற்ற தனிப்பட்ட செல்பீக்களை பதிவு செய்யும்.

மேனி, நிறம், பாலினம் என்ற ஆழமான பகுப்பாய்வு.!

மேனி, நிறம், பாலினம் என்ற ஆழமான பகுப்பாய்வு.!

ஒப்போ எப்5 செல்பீ கேமராவின் இயந்திர கற்றல் தொழில்நுட்பமானது, தோல் நிறங்கள் மற்றும் வண்ணம், வயது, பாலினம் மற்றும் படத்தில் உள்ள உட்பிரிவுகள் ஆகியவற்றிற்கு இடையிலேயான வேறுபாடுகளை அங்கீகரிக்கிறது. இதன் விளைவாய் அது ஒவ்வொரு பொருளுக்கும் அழகுபடுத்தும் மேம்பாடுகளை நிகழ்த்துகிறது. இதன் சிக்கலான படிமுறையானது பெண்கள் மற்றும் ஆண்களை, பெரியவர்களிடமிருந்து குழந்தைகளை வேறுபடுத்தி கொள்ளும் திறனையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு செல்பீயிலும் மேம்பாடுகளை நிகழ்த்த நுட்ப விரிவாக்கங்களை உருவாக்குகிறது அதே சமயம் இயற்கைக்கு மாறான மேம்பாடுகளையும் தவிர்க்கிறது.

எந்தவிதமான கறைகளும் இல்லாத துல்லியமான ஸ்கின் டோன்கள்.!

எந்தவிதமான கறைகளும் இல்லாத துல்லியமான ஸ்கின் டோன்கள்.!

ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் ஏஐ பியூட்டி தொழில்நுட்பம் மூலம் ஒரு உண்மையான அழகை கைப்பற்ற முடியும். ஆக, உங்களுக்கே உரிய ஒரு தனிப்பயனாக்கப்பட்ட பியூட்டி எபெக்ட்டை நீனாகில் பெறுவீர்கள். எந்த சூழலில், யார் செல்பீ எடுக்கிறார்கள் என்பது ஒரு விடயமே இல்லை. ஒப்போ எப்5 ஆனது படத்தில் உள்ள அனைவரின் துல்லியமான தோல் டோனையும் உறுதி செய்யும், தேவையற்ற கறைகளை நீக்கும் முக்கியமாக மிகவும் இயற்கையாக உங்களை காட்சிப்படுத்தும்.

அனுதினமும் மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.!

அனுதினமும் மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.!

மொத்தத்தில், இதன் செல்பீ கேமராவனது அனைவருக்கும் பொதுவான அம்சங்களை பயன்படுத்தாமல் ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பட்ட மற்றும் அவருக்கே உரிய இயற்கையான மேம்பாடுகளை நிகழ்த்தும். இதன் ஏஐ தொழில்நுட்பமானது, புகைப்படக் கலைஞர்களின் வழிகாட்டல் மற்றும் மேக்அப் ஆர்ட்டிஸ்ட்களின் வடிவமைப்புகளின் உதவியுடன் அனுதினமும் மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதற்கு மேல் ஒப்போ எப்5 ஸ்மார்ட்போன் - ஏன் ஒரு அதிநவீன செல்பீ எக்ஸ்பெர்ட் என்றழைக்கப்படுகிறது என்பதற்கான விளக்கம் உங்களுக்கு தேவைப்படாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Click Natural looking selfies with AI powered OPPO F5’s 20MP front camera. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot