கிறிஸ்துமஸ் பரிசு வழங்க மத்தான 3 ஸ்மார்ட்போன்கள்!

By Super
|

கிறிஸ்துமஸ் பரிசு வழங்க மத்தான 3 ஸ்மார்ட்போன்கள்!
புனிதரான ஏசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடபடுகிறது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை கிறிஸ்துமஸ் என்றவுடன் நினைவுக்குல் வருவது "பரிசு" பொருட்கள் தான். இன்றைய தினத்தில் வாடிக்கையாளர்கள் இந்த கிறிஸ்மஸ் பரிசையும், சிறப்பு சலுகைகளையும் பெரிதும் எதிர் பார்க்கின்றனர். இந்த தினத்தை ஒட்டி இன்னும் சில மக்கள் என்ன பரிசு கொடுக்கலாம் என்றும் யோசிக்கன்றனர்.

உலகின் ஒரு பெரிய எழுதப்படாத தத்துவமே மனிதரை மனிதர்கள் தொடர்பு கொள்வது தான். ஒரு குடும்பத்திலேயே ஒவ்வொருவரும் வெவ்வேறு பக்கம் இருக்கையில் தொடர்பு என்ற வார்த்தையே துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இந்த துண்டிப்பை இணைத்த பெருமை நிச்சயம் மொபைல்களுக்கு தான் போகும். எந்த ஒரு பண்டிகையாக இருப்பினும் முதலில் அனைவரும் தேடுவது மொபைல்களை தான்.

உலகத்தின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், அவர்களிடம் எளிதாக பேசி கொள்வது என்பது இன்று சாத்தியமாகிறது. இப்படி பல அரிய விஷயங்களை அசாத்தியமான வகையில் சாத்தியப்படுத்தி காட்டும்

மொபைல்களுக்கும், தொழில் நுட்ப நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய "சபாஷ்" போடலாம். இத்தகைய தொடர்பு வசதியை கொடுக்கும் மொபைல்களை கிறிஸ்மஸ் பரிசாக கொடுப்பது என்பது ஒரு சிறந்த விஷயம் தான்.

அப்படி சிறந்த மொபைல்களை கொடுக்க, முதலில் எந்த மொபைல்கள் சிறந்தது என்று பார்க்கலாம். இந்த பட்டியலில் முதல் மூன்று மொபைல்கள் என்று எடுத்து கொண்டால் நிச்சயம் அதில் ஆப்பிள் ஐபோன் வந்துவிடும்.

இந்த ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் உலக அளவில் ஏகபோக வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன் என்பது உலகறிந்த விஷயம். இது ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. அதோடு புதிய சிரி தொழில் நுட்பத்தின் மூலம் உலகெங்கும் பேசவைத்த ஸ்மார்ட்போன் என்ற பெயரை எளிதாக தட்டி சென்ற பெருமை ஆப்பிள் ஐபோனுக்கு தான் சேரும்.

16ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைலை ரூ.44,000 விலைக்கும், 32ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைலை ரூ.50,000 விலைக்கும், 64ஜிபி கொண்ட ஆப்பிள் மொபைலை ரூ.57,500 விலைக்கும் பெறலாம்.

அடுத்ததாக சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் இடம் பிடிக்க தயாராக இருப்பது சாம்சங் நிறுவனத்தின் கூகுள் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்.

இந்த கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சேன்ட்விச் 4.0 ஓஎஸ் தொழில் நுட்பத்தினை கொண்டது. பட்டயை கிளப்பும் 4.65 இஞ்ச் சூப்பர் அமோல்டு தொடுதிரை வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனை பொருத்த வரை கேமரா பற்றிய கவலையே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 5 மெகா பிக்ஸல் கேமரா இதில் உள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்களையும் இதில் பெறலாம்.

எச்டிசி ரைம் ஸ்மார்ட்போனும் மேல் கூறப்பட்டுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்கள் போல சிறந்த வசதி படைத்த ஸ்மார்ட்போன் தான். சாம்சங் சாகாப்தத்தில் புதுமை படைக்கும் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி நெக்சஸ் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,590 விலையில் கிடைக்கும். கண்ணுக்கு கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போன் எச்டிசி ரைம் என்று கூறலாம். இதன் வடிவமைப்பு நிச்சயம் பார்ப்பவர்களின்

கண்களை எளிதாக கவர்ந்துவிடும். இந்த ஸமார்ட்போனில் கோர்டு என்ற சிறிய லைட் கியூப் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் மெசேஜ், போன்கால்கள் வந்தால் ஜொலிக்கும் தன்மை கொண்டது. 3.7 டபிள்யூவிஜிஏ 480 X 800 சூப்பர் எல்சிடி தொடுதிரை வசதியை கொண்டுள்ளது இந்த எச்டிசி ரைம் ஸ்மார்ட்போன்.

தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்து வைத்து கொண்ட எச்டிசியின் சிறந்த தயாரிப்பாக ரைம் மொபைல் இடம் பெறும். இந்த எச்டிசி ரைம் ஸ்மார்ட்போன் ரூ.27,499 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை மொபைல்போன் பரிசுடன் அமர்க்களமாக கொண்டாடுவதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாடல்கள் சிறந்ததாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X