Home
Mobile

'டக்'குன்னு எப்எம் ரேடியோ கேட்க வசதியாக ஒரு மொபைல்!

By Super

'டக்'குன்னு எப்எம் ரேடியோ கேட்க வசதியாக ஒரு மொபைல்!
மொபைல்களுக்கான தேவைகள் அதிகரித்து கொண்டே போவதால் புதிய புதிய நிறுவனங்கள் மார்க்கெட்டில் புற்றீசல் போல முளைத்து வருகின்றன. இந்த வரிசையில் புதிதாக உருவாகியுள்ள நிறுவனம் தான் சிக்ட்(எஸ்ஐசிடி).

புதிய நிறுவனமாக இருந்தாலும் சிறந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைலை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முயற்சி செய்திருக்கிறது. சோட்டா உஸ்தத் ஐவி-192 என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

இந்த புதிய மொபைல், சில பிரத்யேக வசதிகளை பெற்றுள்ளது. இதில் எப்எம் ரேடியோ வசதியினை பயன்படுத்த பிரத்தியேகமாக பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களில் சிலருக்கு எப்எம் ரேடியோ வசதியை இயக்க சரிவர தெரியவில்லை. இந்த பிரச்சனையை புரிந்து கொண்டு தனி எப்எம் பட்டனை கொடுத்துள்ளது சிக்ட்(எஸ்ஐசிடி).

இதனால் மொபைலை சரியாக இயக்க தெரியாதவர்களும், சோட்டா உஸ்தத் ஐவி-192 மொபைலில் உள்ள எப்எம் ரேடியோவினை எளிதாக இயக்கி இனிமையான பாடல்களை கேட்கலாம். இந்த மொபைலில் ஆற்றல் வாய்ந்த

ஸ்பீக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத போன் கால்களை தவிர்க்கும் வசதியும் இதில் உண்டு. இந்த மொபைல் 3ஜி நெட்வொர்க்கையும் சப்போர்ட் செய்யும்.

2 இஞ்ச் திரை கொண்ட இந்த மொபைலில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதனால் புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும். இந்த புதுமை வாய்ந்த மொபைலில் உள்ள

பிரத்யேக பட்டன் மூலம் இதன் எல்சிடி தொழில் நுட்பத்தினை எளிதாக ஸ்விட்ச் ஆஃப் செய்யலாம். இதில் டியூவல் சார்ஜிங் போர்ட் வசதியும் உள்ளது.

சோட்டா உஸ்தத் ஐவி-192 மொபைல் கூடுதல் வசதி கொண்ட புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதியினையும் வழங்கும். பேட்டரி வசதியை தெரிந்த கொள்ள நிறைய வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 1,450 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 10 மணி நேரம் டாக் டைம் வசதியினை பெற முடியும்.

16ஜிபி வரை இந்த மொபைலில் எக்ஸ்டர்னல் மெமரிய விரிவுப்படுத்திக் கொள்ளலாம். சோட்டா உஸ்தத் ஐவி-192 மொபைல் அசத்தலாக தொழில் நுட்பத்துடன் வெளிவரும் போது, இதன் விலையும் அசத்தும் வகையில் மலிவாக இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X