Apple மறைச்ச உண்மை.. போட்டு உடைச்ச சீன தரவுத்தளம்.. iPhone 15 க்குள்ள இருக்குற பேட்டரி இவ்ளோதான்!
பெரும்பாலான மொபைல் தயாரிப்பு நிறுவனங்களானது தத்தம் ஸ்மார்ட்போன்களின் பேட்டரித்திறன் மீது அதிக கவனம் செலுத்துகின்றன. 5000mAh, 6000mAh திறனை சேர்ப்பதையும், நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்குவதையும் முக்கியமான விற்பனை புள்ளிகளாக பார்க்கின்றன. ஆனால் ஆப்பிள் (Apple) நிறுவனம் ஒருபோதும் இதை செய்வதில்லை!
ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யும் நேரத்தில் டிசைன், டிஸ்பிளே, கேமரா, சிப்செட்டை பற்றி விரிவாக பேசும் ஆப்பிள் நிறுவனமானது, பேட்டரித்திறன் பற்றி அதிகம் பேசுவதில்லை. பெரும்பாலும் - புதிய மாடல்கள் பழைய மாடல்களை விட நீடித்த பேட்டரி லைஃப்பை வழங்குமென்கிற வார்த்தைகள் மட்டுமே அடிபடும்.

சமீபத்தில் அறிமுகமான ஐபோன் 15 சீரீஸுக்கும் இதே நிலைதான். இந்த சீரீஸின்கீழ் வெளியான 4 புதிய ஐபோன்களின் பேட்டரி விவரங்களும் கூட பகிரப்படவில்லை. இதற்கிடையில் இதுகுறித்த விவரங்கள், சீன ஒழுங்குமுறை தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாக மைஸ்மார்ட்ப்ரைஸின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
அதாவது ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் பேற்றித்திறன் மற்றும் வாட் ஆகிய விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, ஐபோன் 15 ஆனது 12.981Wh வாட்டேஜ் கொண்ட 3,349mAh பேட்டரியை கொண்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாண்டர்ட் ஐபோன் 14 மாடலானது 3,279mAh பேட்டரியை கொண்டிருந்தது. ஐபோன் 15 பிளஸ் மாடலானது 16.950Wh வாட்டேஜ் உடன் 4,383mAh பேட்டரியுடன் வருகிறது. இது 4,235mAh பேட்டரி திறன் கொண்ட ஐபோன் 15 பிளஸ் மாடலை விட சற்று அதிகமாக உள்ளது.
அடுத்ததாக உள்ள ஐபோன் 15 ப்ரோ மாடலானது 3,200mAh யூனிட்டை கொண்ட ஐபோன் 14 ப்ரோ மாடலை விட சற்றே அதிகமாக, 12.70Wh வாட்டேஜ் கொண்ட 3,274mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக உள்ள டாப்-ஆஃப்-லைன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது 17.109Wh வாட்டேஜ் கொண்ட 4,422mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள 4,323mAh பேட்டரியை விட சற்று அதிகமாகும்.
முன்னரே குறிப்பிட்டபடி மற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை போலல்லாமல், ஆப்பிள் அதன் ஐபோன்களின் பேட்டரி திறன்களை வெளிப்படுத்தும் பழக்கத்தை, வழக்கத்தை கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக, இது பேட்டரி லைஃப் குறித்த விவரங்களை வெளிப்படுத்துகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது சீரீஸின் சிறந்த பேட்டரி லைஃப்பை வழங்கும் - 29 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும். ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ஆகியவைகள் முறையே 25 மணிநேரம், 23 மணிநேரம் மற்றும் 20 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்கும்.
ஆனால் சீன தரவுத்தளத்தில் இருந்த வெளியான இந்த அறிக்கை, ஆப்பிள் நிறுவனத்தால் மறைக்கப்படும் விவரங்களை "அப்பட்டமாக" வெளிப்படுத்தி உள்ளது. இருப்பினும் இதுபோன்ற தகவல்கள் ஐபோன் 15 சீரீஸின் விற்பனையை பாதிக்குமா என்று கேட்டால்.. நிச்சயமாக இல்லை. ஏற்கனவே ஐபோன்களை பயன்படுத்துபவர்களும் சரி, புதிய பயனர்களும் சரி.. ஐபோன்களில் 6000mAh பேட்டரியை எதிர்பார்ப்பதில்லை.
நேற்று (செப்.15) ஐபோன் 15 சீரீஸின் கீழ் உள்ள 4 மாடல்களின் முன்பதிவுகளும் தொடங்கின என்பதும், இவைகளின் ஷிப்பிங் வருகிற செப்.22 முதல் தொடங்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஐபோன் 15 மாடலின் ஆரம்ப விலை ரூ.79,900 க்ஆகும்.
ஐபோன் 15 பிளஸ் மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜுன் விலை ரூ.89,900 ஆகும். ஐபோன் 15 ப்ரோ மாடலானது ரூ.1,34,900 முதல் வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜுன் விலை ரூ.1,59,900 ஆகும். ப்ரோ மேக்ஸ் மாடலின் 1டிபி ஆப்ஷன் ரூ.1,99,900க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








