எங்கள பார்த்தா எப்படி தெரியுது? "தேவை இல்லாத ஆணிகளை புடுங்க" இந்திய மார்க்கெட்டுக்கு வந்த சைனீஸ் போன்!

|

சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்று, இந்தியாவிற்கு "தேவை இல்லாத" ஒரு ஸ்மார்ட்போனை டிசம்பர் 7 ஆம் தேதியன்று அறிமுகம் செய்கிறது.

அதென்ன ஸ்மார்ட்போன்? தேவை இல்லாத ஸ்மார்ட்போன் என்று கூறும் அளவிற்கு அந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன குறை உள்ளது? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்?

இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்?

நாம் இங்கே பேசுவது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன டெக்னோ (Tecno) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் - டெக்னோ போவா 4 (Tecno Pova 4) ஆகும்!

டெக்னோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன இது 2022, டிசம்பர் 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும்; பின்னர் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா வழியாக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும்!

அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!

பார்க்க நல்லாதான் இருக்கு.. ஆனால்?

பார்க்க நல்லாதான் இருக்கு.. ஆனால்?

பவர் பட்டன் உடன் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், இரண்டு வெவ்வேறு கேமரா ரிங்களில் அமைத்துள்ள 2 கேமராக்கள், பேக் பேனலில் ஒருவகையான டயமண்ட் பேட்டர்ன், டிஸ்பிளேவில் மெல்லிய பெசல்களுடன் பஞ்ச்-ஹோல் கட்அவுட், யூஎஸ்பி டைப்-சி போர்ட் என டெக்னோ போவா 4 ஸ்மார்ட்போன் ஆனது பார்க்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது.

அதுமட்டுமல்ல இது 6000mAh பேட்டரி, 50எம்பி மெயின் கேமரா, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்ற சில வெயிட்டான அம்சங்களையும் இது பேக் செய்கிறது. ஆனாலும் கூட இதில் ஒரு முக்கியமான குறை உள்ளது!

அதென்ன குறை?

அதென்ன குறை?

டெக்னோ போவா 4 ஆனது ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் (4G Smartphone) ஆகும் மற்றும் இது ரூ.20,000 என்கிற பட்ஜெட்டை கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். உங்களுக்கே தெரியும் - இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டன மற்றும் ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய தேவைகள் ஏற்பட்டுள்ளது என்று!

அதுமட்டுமின்றி ரூ.12,000-ஐ சுற்றிய விலைப்பிரிவின் கீழ் பல்வேறு நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட தயார் ஆகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலைப்பாட்டில் டெக்னோ நிறுவனம், இந்தியாவில் ஒரு 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வது ஏன் என்று புரியவில்லை.. அதுவும் ரூ.20கே பட்ஜெட்டில்!

பலருக்கும் தெரியாது இப்படி ஒரு Jio பிளான் இருக்குனு! கம்மி விலையில் நினைச்சு பார்க்காத டேட்டா, 14 OTT சந்தா!பலருக்கும் தெரியாது இப்படி ஒரு Jio பிளான் இருக்குனு! கம்மி விலையில் நினைச்சு பார்க்காத டேட்டா, 14 OTT சந்தா!

இதில் 5ஜி-க்கான ஆதரவு மட்டும் தான் ஒரே குறையா?

இதில் 5ஜி-க்கான ஆதரவு மட்டும் தான் ஒரே குறையா?

டெக்னோ போவா 4 ஸ்மார்ட்போனில் 5ஜி-க்கான ஆதரவு இல்லை என்பது மட்டும் தான் ஒரே குறையா? என்று கேட்டால்... கொஞ்சம் கூட யோசிக்காமல் "ஆம்" என்றே கூறலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி இல்லை என்பதை தவிர்த்து வேறு எந்த குறையும் இல்லை!

இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ ஜி 99 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி அளவிலான இன்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டிருக்கும். போதாக்குறைக்கு, இதில் 13GB என்கிற விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) ஆதரவும் கிடைக்கும்.

அவ்வளவு தானா..? இல்லவே இல்லை.. இன்னும் இருக்கு!

அவ்வளவு தானா..? இல்லவே இல்லை.. இன்னும் இருக்கு!

டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி, போவா 4 ஸ்மார்ட்போனில் டூயல் கேம் இன்ஜின் (Dual Game Engine) இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரியையும் கொண்டிருக்கும்

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 6.82-இன்ச் அளவிலான HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 1640x720 பிக்சல் ரெசல்யூஷனுடன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும் வழங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பில் டூயல் எல்இடி ஃபிளாஷும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 8MP செல்பீ கேமரா உள்ளது!

Photo Courtesy: Tecno

Best Mobiles in India

English summary
Chinese Mobile Company Tecno Launching New 4G Smartphone In India on December 7th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X