Home
Mobile

சீன நிறுவனம் வழங்கும் உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன்!

By Super

சீன நிறுவனம் வழங்கும் உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன்!
உலகிலேயே மிக மெல்லிய கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறது சீனாவின் ஓப் நிறுவனம். இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த ஓப் நிறுவனம் அதிகம் பரிட்சயப்படாத நிறுவனமாக இருக்கலாம். ஆனால் சீன நிறுவனமான ஓப் மிக மெல்லிய கவர்ச்சிகரமானதொரு ஸ்மார்ட்போனை வழங்கும்.

ஓப் ஃபைன்டர் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 6.65 எம்எம் தடிமன் கொண்டதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், ஹுவெய் அசன்டு பி-1 ஸ்மார்ட்போனையும் விட இந்த ஓப் ஃபைன்டர் ஸ்மார்ட்போன் மெல்லிய வடிவமைப்பை கொண்டதாக இருக்கும் . ஆம்! ஹுவெய் ஸ்மார்ட்போன் 6.68 எம்எம் தடிமன் கொண்டது.

வடிவமைப்பில் மட்டும் கவர்ச்சிகரமாக இருந்தால் போதுமா? அதன் தொழில் நுட்பமும் சிறப்பானதாக இருக்க வேண்டுமே என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரமும் கொடுக்கப்பட்டு்ள்ளது.

இந்த ஓப் ஃபைன்டர் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையின் மூலம் அமோலெட் ப்ளஸ் திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இதன் இயங்குதளத்தினை பற்றி தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கும் வாடிக்கையாளர்களின் ஆர்வமும் புரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.

இதன் 4.3 இஞ்ச் அகன்ற திரையில் தேவையான தகவல்களை தெளிவாக பார்க்கலாம். 1 ஜிபி வரை இன்டர்னல் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினையும் வழங்கும்.

இதன் ஆன்ட்ராய்டு இயங்குதளம் அதி வேகமாக இயங்க இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் வசதியினையும் கொடுக்கும்.

ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர், வைபை, புளூடூத் போன்ற தொழில் நுட்பங்களுக்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக துணை புரியும். இந்த ஓப் ஃபைன்டர் ஸ்மார்ட்போனுக்கு ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து ப்ரீ-ஆர்டர் துவங்க உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000 விலை கொண்டதாக இருக்கும். ஓப் ஃபைன்டர் ஸ்மார்ட்போனின் விலையை வைத்து பார்க்கும் போது காஸ்ட்லி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் தான் இந்த ஸ்மார்ட்போன் சேரும் போல் தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X