Home
Mobile

1 வருட வாரண்டியுடன் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல்!

By Super
1 வருட வாரண்டியுடன் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல்!
ஆரோஸ் என்ற புதிய மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது சைனாவேஷன் நிறுவனம். இந்த மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது.

இது ஆன்ட்ராய்டு 2.2 ஃப்ரையோ ஆப்பரேட்டிங் வசதி கொண்டது. மிகவும் கவரச்சிகரமாக வடிமைக்கப்பட்டுள்ளது.

ஆரோஸ் மொபைல் 4.3 இஞ்ச் அகன்ற டச் ஸ்கிரீன் திரை வசதி கொண்டது. இந்த மொபைல் டியூவல் சிம் வசதி மட்டும் அல்லாமல் டியூவல் கேமரா வசதியையும் கொண்டுள்ள ஸ்மார்ட்போனாகும்.

இதில், 2 மெகா பிக்ஸல் கேமராவும் மற்றும் 0.3 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் மெமரி கார்டை பொருத்திக்கொள்ள மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

16ஜிபி எக்ஸ்டர்னல் மெமரி கெப்பாசிட்டியும் உள்ளது. இதில் மைக்ரோபோனும் வழங்கப்பட்டுள்ளது. ஆரோஸ் மொபைல் 256 எம்பி ரேம் வசதி கொண்டது.

இந்த டியூவல் சிம் ஸ்மார்ட் மொபைலில் கோர் சிபியூ ஏஆர்எம் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. புளூடூத், வைபை போன்ற வசதியும் உள்ளது.

இதனால் தகவல் பரிமாற்றம், நெட் போன்ற வசதியினை எளிதாக அனுகலாம்.

இந்த போன் ஆடியோ, வீடியோ, யூஎஸ்பி, மல்டி லேன்ங்குவேஜ் போன்ற வசதிகளுக்கு சப்போர்ட் செய்கிறது. 1,200 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 4 மணி நேரம் டாக் டைம் மற்றும் 48 மணி நேரம் ஸ்டான்-பை டைம் கொடுக்கிறது.

சைனாவேஷன் நிறுவனம் இந்த ஸ்மார்ட் மொபைலை 1 வருடம் வாரண்டியுடன் வெளியிட உள்ளது.

ஆரோஸ் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்மொபைல் ரூ.9,000 விலையை ஒட்டி இந்திய சந்தையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X