என்ன இப்படி ஆகிடுச்சு.. OnePlus 13 இந்திய அறிமுக தேதி & விலையை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்.. ஏன்?
ஆஹா.. ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் இந்தமுறை 2 மாதங்களுக்கு முன்பாகவே சீனாவில் அறிமுகமாகிறது. ஆக இந்தியாவிற்கும் 2 மாதங்களுக்கு முன்பாகவே வந்துவிடும் என்று சிலிர்த்துப்போய் சில்லறைகளை விட்டெறிந்தவர்களில் நீங்களும் ஒருவர் என்றால்.. ரொம்ப ஸாரி, உணளை அப்செட் ஆக்கும் ஒரு அப்டேட் எங்களிடம் உள்ளது. கூடவே இன்னொரு (ஒன்பிளஸ் 13 விலை பற்றி) ஷாக்கும் உள்ளது!
சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் 13 மாடலும் உள்ளது. இது வருகிற அக்டோபர் 31 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகமாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பட்டுள்ளது. இதே (வெளியீட்டு) வேகத்தை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம் என்கிற கேள்விக்கு தற்போது கிடைத்துள்ளது.

இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அறிமுகமானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் லான்ச் டைம்லைனை அப்படியே பின்பற்றி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஆனது 2024 ஜனவரி மாத இறுதியில் தான் இந்தியாவில் அறிமுகமானது.
ஆக ஒன்பிளஸ் கடைசியாக ஒரு ஃபிளாக்ஷிப்பை அறிமுகம் செய்து 10 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. எனவே ஒன்பிளஸ் 13 வெளியீட்டில், வே இந்நிறுவனம் அதன் வருடாந்திர முறையை பின்பற்றவே அதிக வாய்ப்புள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது, சீன சந்தையில் ஷாவ்மீ மற்றும் ஐக்யூ உடன் நிலவும் போட்டித்தன்மை காரணமாகவே ஒன்பிளஸ் 13 விரைவாக அறிமுகமாகிறது என்பதையும், உலகளாவிய அறிமுகமானது வழக்கம் போல "ஆடி அசைந்தே" நடக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
உடனே "சரி.. இப்போ லேட்டா வந்தா என்ன.. போன் வெயிட்டா இருக்கும்ல!" என்று ஆர்வம் கொள்ள வேண்டாம். போன் மட்டுமல்ல விலையும் வெயிட்டாகத்தான் இருக்க போகிறது. சீன சமூக ஊடக தளமான வெய்போ (Weibo) வழியாக வெளியான சமீபத்திய லீக்படி.. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.77,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று பரிந்துரைக்கிறது
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விலையான ரூ.‚69,999 உடன் ஒப்பிடும்போது இது ஒரு பெரிய 'ப்ரைஸ் ஜம்ப்' ஆகும். இந்த அளவிலான விலை அதிகரிப்புக்கு ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ள சில அட்டகாசமான.. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களே காரணமாக இருக்கும்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!
ஒன்பிளஸ் 13 ஒரு ஸ்டைலான வடிவமைப்பை கொண்டுள்ளது, முன்பக்கத்தில் மைக்ரோ-குவாட்-கர்வ்டு டிஸ்பிளே (Micro-quad-curved Display) மற்றும் பின்புறத்தில் சர்க்கிள் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் 13 ஆனது அதன் முன்னோடிகளை போல, அதன் கேமரா யூனிட்டை ஸ்மார்ட்போனின் ஃபிரேம் உடன் ஒருங்கிணைக்காது.
மாறாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மூன்று லென்ஸ்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவாய்கள் ஒரு வட்ட வடிவிலான ஐலேண்ட்டிற்குள் சதுர வடிவத்தில் செட் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு மெட்டல் ரிங்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் லுக்கை மேம்படுத்துகிறது மற்றும் கேமரா பகுதி மீதான கவனத்தை ஈர்க்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஆனது குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டிருக்கும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ருக்கும். பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை இது 6,000mAh பேட்டரியை உள்ளடக்கியதாக வதந்தி பரவுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் முந்தைய மாடலில் இருந்த 5,400mAh பேட்டரியில் இருந்து கணிசமான அதிகரிப்பாக இருக்கும்.
ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஆனது போன் 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா சென்சார்களை பொறுத்தவரை , இது சோனியின் LYT-808 சென்சார் மற்றும் எப்/1.6 அபெர்ச்சர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








