இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு.. ரூ.12000 பட்ஜெட்டில் உள்ள பல போன்கள் க்ளீன் போல்ட்.. TECNO முரட்டு சம்பவம்!
நாங்கள் இங்கே குறிப்பிடும் "மச்சக்காரன்".. சீன மொபைல் நிறுவனமான டெக்னோவை (Tecno) தான். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், பெரிதும் கவனிக்கப்படாத இந்த மொபைல் பிராண்ட், தற்போது சாம்சங், சியோமி போன்ற பிரபல நிறுவனங்களுக்கு எதிரான மாடல்களை களமிறக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
விலைக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் விலையை மீறிய வடிவமைப்பு தான் டெக்னோ நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமென்றால் அது மிகையாகாது. பட்ஜெட் விலையில்.. ஆனால் பிரீமியம் லுக்கில், அதே சமயம் "கொடுக்குற காசுக்கு ஏற்ற" ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்றால் நீங்கள் டெக்னோவின் பக்கம் தான் சாய வேண்டும்!

அந்த வரிசையில், டெக்னோவின் லேட்டஸ்ட் 5ஜி போனாக டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி (Tecno Spark 10 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இதே விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் மற்ற போன்கள், குறிப்பாக 5ஜி மாடல்களுக்கு செம்ம அடி விழுமென்பதில் சந்தேகமே வேண்டாம்!
டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி அம்சங்கள்: இது 720 x 1612 பிக்சல் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.6-இன்ச் எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (MediaTek Dimensity 6020) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது, அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் "குறிப்பிடப்படாத" ஏஐ சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் ஏஐ செல்பீ கேமரா உள்ளது; இது டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் உள்ள வாட்டர் டிராப் நாட்ச்சில் உட்பொதிக்கப்பட்டுள்ளது.
டெக்னோவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனானது 18W ஃபிளாஷ் சார்ஜ் சப்போர்ட் உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. டெக்னோவின் கூற்றுப்படி இது வெறும் 50 நிமிடங்களில் 0 முதல் 50% வரை சார்ஜ் செய்யும். மேலும் இது 39 நாட்கள் என்கிற ஸ்டேண்ட்பை டைம்-ஐ (Standby time) வழங்கும்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, வைஃபை 802.11 ஏ /பி/ஜி/என்/ஏசி, ப்ளூடூத் 5.0 மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஹைஓஎஸ் (HiOS) 12.6 உடன் வருகிறது.
டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி விலை மற்றும் விற்பனை: இது மெட்டா பிளாக், மெட்டா ப்ளூ மற்றும் மெட்டா ஒயிட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 4ஜிபி ரேம் + 64ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் மட்டுமே வாங்க கிடைக்கும். இருப்பினும் மெமரி ஃப்யூஷன் ரேம் தொழில்நுட்பத்தின் வழியாக இதன் ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவாக்கலாம்.
கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டிற்கான ஆதரவும் உள்ளது. அதை பயன்படுத்தி போன் மெமரியை 1டிபி வரை விரிவாக்க முடியும். டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ. 12,999. இது வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் (அனைத்து பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக) இந்தியாவில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








