உலகின் முதல் ஃபிட்ஜட் ஸ்பின்னர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹாங்காங் நிறுவனமான சில்லி இன்டர்நேஷனல் ஹோல்டிங் (HK) லிமிடெட், இந்தியாவில் இரண்டு புதிய போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹாங்காங் நிறுவனமான சில்லி இன்டர்நேஷனல் ஹோல்டிங் (HK) லிமிடெட், இந்தியாவில் இரண்டு புதிய போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த கே188 மற்றும் எப்05 என்ற மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட கொண்டுள்ளது.

ஃபிட்ஜட் ஸ்பின்னர் போல வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், இதுதான் உலகின் முதல் பிடிமான ஸ்பின்னர் மொபைல் என சில்லி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அனைவரையும் கவர்ந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்:
அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் கிடைக்கும் என சில்லி மொபைல் நிறுவனம் தகவல்தெரிவித்துள்ளது.

மைக்கேல் ஃபெங்
சில்லி இன்டர்நேஷனல் ஹோல்டிங்(HK) லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை தலைவர் மைக்கேல் ஃபெங் தெரிவித்தது என்னவென்றால், இந்தியாவில்
இந்த ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் விற்பனை செய்யபடும் எனத் தெரிவித்தார், மேலும் பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
கே188 ஸ்மார்ட்போன் பொதுவாக 32எம்பி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 8ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மல்டிமீடியா ஆதரவு வழங்குகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நிறங்கள்:
ரோஜா தங்கம், தங்கம், வெள்ளி, கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் இந்த சில்லி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவருகிறது. மேலும்
ப்ளூடூத் ஹெட்செட் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:
சில்லி மொபைல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கே188 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,300எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எப்05
ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,700எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications