ஆண்ட்ராய்டு போனை விற்க மைக்ரோமேக்ஸின் துணிவான விளம்பரம்

By Super
|
ஆண்ட்ராய்டு போனை விற்க மைக்ரோமேக்ஸின் துணிவான விளம்பரம்
ஆப்பின் ஐபோனுக்கு போட்டியாக தமது போனை வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் செல்ல மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய விளம்பர யுத்தியை கடைபிடிக்கிறது. ஆப்பிள் கையை எடுத்து அதன் கண்ணிலே குத்தும் விதத்தில் இந்த விளம்பரம் சற்று சிக்கல் நிறைந்ததாக தோன்றினாலும் வாடிக்கையளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதாவது தனது மைக்ரோமாக்ஸ் எ70 ஆண்ட்ராய்டு போனை விளம்பரம் செய்வதற்காக ஐபோனின் வார்த்தைகளை “என்னால் இந்த போனைத் தரமுடியும்” என்ற வாசகத்தை விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் ஏற்கனவே நோக்கிய நிறுவனத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. தனது மைக்ரோமாக்ஸ் எ70 ஆண்ட்ராய்டு போன் மூலம் ஆப்பிளின் ஐபோனுடன் போட்டிபோட விழைகிறது.

அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஆப்பிள் ஐபோனை குறைகூறும் விதத்திலும், நோக்கத்திலும் இந்த விளம்பரத்தை தயாரிக்கவில்லை. ஆப்பிள் ஐபோனுக்கு நிகரான எங்களது ஏ-70 ஸ்மார்ட் போனை மலிவான விலைக்கு இந்திய வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை தெரிவிக்கும் வகையில் எடுத்தோம், என்றார்.

மைக்ரோமாக்ஸின் இந்த விளம்பர யுத்திக்கு நேர்மறையாக மற்றும் எதிர்மறையாக பல விமர்சனங்கள் வந்தாலும் அது மைக்ரோமாக்ஸ் நிறுவனத்திற்கு லாபமாகவே அமைகிறது.

மைக்ரோமாக்ஸ் ஏ-70 மொபைல் ஆண்ட்ராய்டு வி2.2 ஓஎஸ் மற்றும் 600 மெகாஹெர்ட்ஸ் ப்ராஸஸரைக் கொண்டுள்ளது. 256கே வண்ணங்களை சப்போர்ட் செய்யும் அளவு டிஎப்டி கெப்பாஸிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது.

மேலும் இதன் திரை தானாக டர்ன் ஆப் வசதியும் கொண்டது. இது ப்ளூடூத், வைபை மற்றும் ஜிபிஎஸ் வசதிகளையும் அளிக்கிறுது. இதனுடைய 2 மெகா பிக்ஸல் கேமரா மற்ற போன்களும் ஒரு கிளியை ஏற்படுத்தும். அதே நேரத்தில் இதனுடைய அமைப்பைப் பார்க்கும் போது ஆப்பிள் ஐபோனுக்கு போட்டிபோடும் அளவு இருக்கிறது.

மைக்ரோமாக்ஸ் எ70ன் விளம்பரம் வரவேற்பைப் பெற்றாலும் அது எவ்வளவு காலத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. மைக்ரோமாக்ஸ் எ70 கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விளம்பரத்தின் மூலம் அதற்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட விளம்பரங்கள் மக்கள் மனதில் நீண்ட நாள் இருக்க முடியாது. மேலும் இது எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

இந்திய மொபைல் வர்த்தகத்தில் மைக்ரோமாக்ஸ் 10% பங்கை வைத்திருக்கிறது. மேலும் அந்நிறுவனம் 40 வகையான புதிய மொபைல்களை களமிரக்கவிருக்கிறது. அதே நேரத்தில் அவர்களின் புதிய விளம்பரத்தின் படி மைக்ரோமாக்ஸ் எ70 போனை ரூ. 7999க்கு வாங்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X