வயதானவர்கள் பயன்படுத்த மிகச்சிறந்த 5 ஸ்மார்ட்போன் மாடல்கள்

ஒருசில அடிப்படை தேவைகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை சீனியர்களுக்கு கண்டிப்பாக தேவை. இந்த நிலையில் அவர்களுக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போனை தேர்வு செய்து கொடுப்பது நல்லது.

By Siva
|

கடந்த சில ஆண்டுகளாக டெக்னாலஜியின் வளர்ச்சி மிக அபாரமாக உள்ளது. குறிப்பாக 90ஆம் ஆண்டுகளில் இருந்து இதன் வளர்ச்சிக்கு பலரால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில் இதன் வளர்ச்சி மிக மிக அதிகம்.

வயதானவர்கள் பயன்படுத்த மிகச்சிறந்த 5 ஸ்மார்ட்போன் மாடல்கள்

இந்த நிலையில் 1970ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள் தற்போது ஐம்பது வயதை தாண்டி இருப்பார்கள். அவர்களால் இந்த ஹைடெக் டெக்னாலஜியை புரிந்து கொள்வது சில சிரமங்கள் இருக்கும். அவர்கள் உங்கள் பெற்றோர்களாகவோ அல்லது தாத்தா பாட்டியாகவோ இருக்கலாம்.

தற்காலத்தின் நவீன டெக்னாலஜியை புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருக்கும் வயதானவர்களுக்கு அதை சொல்லி கொடுக்கும் பொறுமை அல்லது நேரம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம், அப்படியே சொல்லி கொடுத்தாலும் எத்தனை பேருக்கு புரியும் என்பது கேள்விக்குறியே.

அதே நேரத்தில் ஒருசில அடிப்படை தேவைகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை அவர்களுக்கு கண்டிப்பாக தேவை. இந்த நிலையில் அவர்களுக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போனை தேர்வு செய்து கொடுப்பது நல்லது. இந்த கட்டுரையில் வயதான் சீனியர்களுக்கு ஏற்ற ஐந்து முக்கிய ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்

ஜிட்டர்பக் ஸ்மார்ட் (Jitterbut Smart)

ஜிட்டர்பக் ஸ்மார்ட் (Jitterbut Smart)

5.5 இன்ச் ஸ்க்ரீன் கொண்ட பெரிய டிஸ்ப்ளே, அதுமட்டுமின்றி எளிய முறையில் டைப் செய்ய UI கீபோர்டு. வயதானவர்கள் மிக எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு பக்கமும் அமைந்துள்ள டூயல் கேமிரா, மேலும் அதிக நேரம் சார்ஜ் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெரிய பேட்டரி

பவர்டெல் M9500 ( PowerTel M9500 )

பவர்டெல் M9500 ( PowerTel M9500 )

இந்த ஸ்மார்ட்போன் வயதானவர்களுக்கு என்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட ஒரு போன். சரியாக கேட்கும் திறன் மற்றும் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு மிகத்தெளிவாக கேட்கும், பார்க்கும் அம்சம் உள்ள ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 90 dB அளவுக்கு ரிங்டோன் சத்தம் கேட்கும் என்பதால் லேசாக கேட்கும் திறன் உள்ளவர்களுக்கு சரியான போன். அதேபோல் இதன் சைஸ் பெரிய அளவில் இருப்பதால் படங்கள் பெரிய அளவில் தெரியும், மேலும் UI கீபோர்டு இருப்பதால் டைப் செய்வதும் மிக எளிது

எம்போரியா ஸ்மார்ட் (Emporia Smart)

எம்போரியா ஸ்மார்ட் (Emporia Smart)

இந்த ஸ்மார்ட்போனில் தனியாக ஒரு கீபோர்டு இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் டிஸ்ப்ளே கீபோர்டை பயன்படுத்தாமல் தனியாக இருக்கும் கீபோர்டை பயனப்டுத்தலாம். இதனால் டைப் செய்வது மிக எளிதாக இருக்கும்.

மிக எளிதாக உபயோகிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் இருப்பதால் சீனியர்களுக்கான சிறந்த போன் என்றே இதை சொல்லலாம். இந்த ஸ்மார்ட்போனி 9MP ஹை குவாலிட்டி பின்பக்க கேமிராவும், 1MP செல்பி கேமிராவும் உள்ளது.

டோரோ லிபர்டோ 825 (Doro Liberto 825)

டோரோ லிபர்டோ 825 (Doro Liberto 825)

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்க்ரீனில் உள்ள எழுத்துக்கள், ஐகான்கள் மற்றும் இதர வகைகள் அனைத்துமே பெரிய அளவில் தெரிவதால் கொஞ்சம் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும். அதேபோல் பார்வை குறைபாடு இருப்பவர்கள் எந்தவித சிரமமும் இன்றி இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்டலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ரிமோட் ஆக்சஸ் இருப்பதால் காண்டாக்டை தேடும்போது இதை பயன்படுத்தி எளிய வகையில் தேடலாம். அதேபோல் நல்ல வேகத்துடன் இயங்கும் பிராஸசர், அதிநவீன கேமிராவும் இதில் அமைந்துள்ளதால் புகைப்படம் எடுக்க தகுதியான ஒரு ஸ்மார்ட்போன்

சாம்சங் போன்ஸ் (Samsung Phones)

சாம்சங் போன்ஸ் (Samsung Phones)

சாம்சங் நிறுவனத்தின் UI கொண்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் சீனியர்களுக்கு மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த பொன்களில் ஐகான் மற்றும் சில அம்சங்களில் பெரிய அளவில் தெரிவதால் சீனியர்களுக்கு சிறந்ததாக உள்ளது.

மேற்கண்ட ஐந்து மாடல் ஸ்மார்ட்போன்கள் சீனியர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு இந்த வகை போன்களை நீங்கள் வாங்கி கொடுக்கலாம், அல்லது பரிந்துரை செய்யலாம். வயதான காலத்தில் அதிக சிரமம் இன்றி, அடுத்தவர்கள் உதவி இன்றி அவர்கள் பயன்படுத்த இந்த போன்கள் சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Just perfect for people with age 40 to 70

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X