ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் 5G போன்கள்.! உடனே 5ஜிக்கு மாறுங்கள் மக்களே.!

|

நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்து மாறிவிட்டதால் ஸ்மார்ட் போன் என்பது அனைவரது கட்டாய தேவையாகி விட்டது. மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களும் அவர்களுக்கு ஏற்ற வகையில் புது-புது அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றனர். மக்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு அனைத்து விலையிலும் இப்போது 5G ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றன.

கம்மி விலையில் பெஸ்டான 5G ஸ்மார்ட்போன் வேண்டுமா?

கம்மி விலையில் பெஸ்டான 5G ஸ்மார்ட்போன் வேண்டுமா?

மக்களின் தேவை அதிகமாவதால் 3G, 4G என்று வேகமெடுத்த நெட்ஒர்க்கள் இப்போது 5Gயை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே மக்களும் 5G ஸ்மார்ட் போன்களை வாங்குவதில் இப்போதிலிருந்தே ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி உங்களுக்கு 5G ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், குறிப்பாக 5ஜி போனிற்கே உங்களுடைய பட்ஜெட் ரூ. 15,000 என்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.

உங்கள் பட்ஜெட் வெறும் ரூ. 15,000 தானா? அப்போ இந்த லிஸ்டை பாருங்க.!

உங்கள் பட்ஜெட் வெறும் ரூ. 15,000 தானா? அப்போ இந்த லிஸ்டை பாருங்க.!

சாம்சங் காலக்சி M13, ரெட்மீ நோட் 11T 5G, போகோ M4 போன்ற முன்னனி ஸ்மார்ட் போன்கள் என்று ரூ. 15,000 விலைக்குள் இருப்பவற்றை உங்களுக்காகத் தேர்ந்தெடுத்து உள்ளோம். அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் தீபாவளி சேல் நடந்துகொண்டிருப்பதால் ஆஃபரில் குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் போன்கள் உங்களுக்கு கிடைக்கின்றன. ரூ. 15,000 க்குள் கிடைக்கும் இந்த ஆண்டின் சிறந்த ஐந்து 5G ஸ்மார்ட் போன்கள் இதோ.

WhatsApp பயனர்களுக்கு புது எச்சரிக்கை.! மோசமான பிழையில் இருந்து தப்பிக்க இதை செய்யணும்.!WhatsApp பயனர்களுக்கு புது எச்சரிக்கை.! மோசமான பிழையில் இருந்து தப்பிக்க இதை செய்யணும்.!

சாம்சங் கேலக்ஸி M13 5G (Samsung Galaxy M13 5G)

சாம்சங் கேலக்ஸி M13 5G (Samsung Galaxy M13 5G)

5000mAh பேட்டரி மற்றும் 6.5 இன்ச் HD+ LCD டிஸ்பிலேயுடன் விற்பனையாகிக் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி M13 5G ஸ்மார்ட் போன் அமேசானில் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றது. சாம்சங்கின் இந்த போன் Mediatek Dimensity 700 சிப்செட் மூலம் உருவாக்கப்பட்டிருப்பதால் உபயோகிக்கும் போது சிறந்த அனுபவத்தைத் தருகிறது. இந்த Samsung Galaxy M13 5G இப்போது ரூ. 11,999 விலைக்கு அமேசானில் விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் 15W சார்ஜருடன் உங்களுக்குக் கிடைக்கிறது.

ரெட்மீ நோட் 11T 5G (Redmi Note 11T 5G)

ரெட்மீ நோட் 11T 5G (Redmi Note 11T 5G)

MediaTek Dimensity 810 சிப்செட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரெட்மீ ஸ்மார்ட் போன் மற்றொரு சிறந்த 5G போனாக விற்பனை செய்யப்படுகிறது. இது 6.6 இன்ச் FHD+ டிஸ்பிலேயுடன் அதிக ரெசொலூஷன் மற்றும் ரிப்பிரேஷ் ரேட்டு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. தரமான கேமரா மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கருடன் வரும் இந்த ரெட்மீ நோட் 11T 5Gயின் 64GB வேரியன்ட் Mi.com இணையதளத்தில் ரூ. 14,999 விலைக்கு விற்பனையாகிறது. ஆனால் அமேசானில் 128GB வேரியன்ட்டை கூப்பன் பயன்படுத்தி ரூ. 14,499 விலையில் வாங்கலாம்.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

போகோ M4 5G (Poco M4 5G)

போகோ M4 5G (Poco M4 5G)

இந்த பட்டியலில் குறைந்தபட்ச விலையில் கிடைப்பது இந்த போகோ M4 5G ஸ்மார்ட் போன். குறைந்த விலையாக இருந்தாலும் MediaTek Dimensity 700 SoC சிப்செட்டில் உருவாக்கப்பட்டதால் சிறந்த அனுபவத்தைத் தருகிறது. 6.58 இன்ச் FHD+ டிஸ்பிலேயுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனுடன் 5000mAh பேட்டரி மற்றும் 18 W சார்ஜரும் வழங்கப்படுகிறது. 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் கொண்ட போகோ M4 5G வேரியன்ட் பிளிப்கார்ட்டில் ரூ. 10,999 விலையில் விற்கப்படுகிறது.

iQOO Z6 லைட் 5G (iQOO Z6 Lite 5G)

iQOO Z6 லைட் 5G (iQOO Z6 Lite 5G)

Qualcomm Snapdragon 4 Gen 1 ப்ராசஸர் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த iQOO Z6 லைட் 5G 120Hz டிஸ்பிலேயுடன் வருகிறது. மற்ற பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை போலவே இந்த iQOO Z6 லைட் 5G ஸ்மார்ட் போனும் 5000mAh பேட்டரி மற்றும் 18 W சார்ஜருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் போனை கூப்பன் பயன்படுத்தி அமேசானில் ரூ. 12,749 விலைக்கு வாங்கலாம்.

ரியல்மி 9i 5G (Realme 9i)

ரியல்மி 9i 5G (Realme 9i)

இது ஒரு ரீசென்ட் அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போன் சாதனம் Dimensity 810 சிப்செட் உடன் 6.6' இன்ச் FHD+ மற்றும் 90Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 5000mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. குறைந்த விலையில் இந்த டிவைஸை வாங்க நினைத்தால் நீங்கள் நேரடியாக பிளிப்கார்ட் சென்று, வெறும் ரூ. 14,999 விலைக்கு இதை வாங்கலாம். வங்கி கார்டுகளுடன் சலுகையுடன் இது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Check Out These Top 5G Smartphone Under Rs 15000 To Buy Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X