மலிவான விலையில் வரும் ஃப்ளை ஆன்ட்ராய்டு போன்

Posted By: Staff

மலிவான விலையில் வரும் ஃப்ளை ஆன்ட்ராய்டு போன்
இரண்டு ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்ய உள்ளது ஃப்ளை மொபைல் நிறுவனம். இந்த மொபைல் மாடலில் 8 மற்றும் 9 அடிப்படையாகக் கொண்ட ஏஆர்எம் சிப்செட் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எம்டிக்கே மற்றும் ராக் சிப் நிறுவனம் இந்தத் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட் போனை உருவாக்கியிருக்கிறது.

இந்த இரண்டு மொபைல்களுமே 2.8 மற்றும் 3.0 இஞ்ச் திரை வசதியை கொண்டுள்ளது. 1 ஜிஎச்இசட் பவர்ஃபுல் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.512 எம்பி டிடிஆர்3 ரேம் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களில் இரண்டாவது மாடல் எம்டிகே ச்சிப்செட் வசதியினை மட்டும் பெற்றுள்ளது.

ஆனால்,ராக்ச்சிப்பைக் காட்டிலும் சிறந்த பவர் மேனேஜ்மென்ட்டை கொடுக்க இயலாது. ஏனென்றால் ராக்ச்சிப்பில் ஆர்எஃப் கம்யூனிகேஷன் சசிப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஜிபிஎஸ் பயன்பாடுகள் உள்ளன. இந்த ஸ்மார்ட் போனின் மூலம் சிறந்த தொழில் நுட்பத்தைக் கொடுத்திருக்கிறது ஃப்ளை நிறுவனம்.

புளூடூத் வசதி உள்ளதால் எளிதில் நன்பர்களிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். ஸ்பைஸ் எம்ஐ270 என்ற மொபைல் ஆன்ட்ராய்டு வசதி கொண்டது. இது மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. அதே போல் ஃப்ளை ஸ்மார்ட்போன்ஸும் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக இந்திய சந்தையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 3ஜி வசதி இல்லை. ஆனால் வேகமான நெட் வசதியினைப் பெற வைபை வசதி உள்ளது. ரூ.4,500 விலையில் இந்த புதிய ஆன்ட்ராய்டு போன் வர இருக்கிறது. இந்திய சந்தையில் நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்