ரூ. 501 விலையில் ‘சாம்ப் ஒன் c1’ சேல்ஸ் எப்போது? புதிய தகவல்

By Siva
|

உலகின் மிக விலை குறைந்த ஸ்மார்ட்போன் 'ஃப்ரீடம் 251' என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ.501க்கு 'சாம்ப் ஒன் c1’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது,.

ரூ. 501 விலையில் ‘சாம்ப் ஒன் c1’ சேல்ஸ் எப்போது? புதிய தகவல்

ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்ற முன்பதிவில் ஏராளமானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். இந்நிலையில் முன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பர் 2 முதல் டெலிவரி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விலைதான் ரூ.501.

ஜியோவை சமாளிக்க ரூ.249க்கு அன்-லிமிட்டெட் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!!

ஆனால் இதில் ரூ.,8000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளும் உண்டு. இந்நிலையில் இந்த 'சாம்ப் ஒன் c1’ மாடல் ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பதை பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மீண்டும் ரிஜிஸ்ட்ரேஷன் தொடங்குமா?

மீண்டும் ரிஜிஸ்ட்ரேஷன் தொடங்குமா?

‘சாம்ப் ஒன் c1' ஸ்மார்ட்போனில் ரிஜிஸ்ட்ரேஷன் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் இதுவரை ரிஜிஸ்டர் செய்தவர்களுக்கு மட்டுமே போன் வழங்கப்படும். இந்நிலையில் மீண்டும் ரிஜிஸ்ட்ரேஷன் தொடங்கும் என எதிர்பார்க்கபட்டாலும் அப்படி ஒரு அறிகுறியே தெரியவில்லை என்பதும் உண்மைதான்

மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

ஏற்கனவே ரிஜிஸ்ட்ரேஷன் செய்யாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நிறுவனத்தின் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்த போதிலும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. முதல்கட்ட ரிஜிஸ்ட்ரேஷன் செய்தவர்களுக்கு போன் சப்ளை செய்த பின்னர்தான் அடுத்த கட்ட ரிஜிஸ்ட்ரேஷன் குறித்த தகவல் தெரிய வரும்

உண்மையில் என்னதான் நடக்குது?

உண்மையில் என்னதான் நடக்குது?

உண்மையில் ‘சாம்ப் ஒன் c1' நிறுவனம் ரிஜிஸ்ட்ரேஷனின்போது முன்பணம் எதுவும் வாங்கவில்லை. ஸ்மார்ட்போனை டெலிவரி செய்யும்போது தான் பணம் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிறகு ஏன் ரிஜிஸ்ட்ரேஷனில் கட்டுப்பாடு வைத்துள்ளது என்பது தெரியவில்லை. பணம் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் டெலிவரி செய்யவில்லை என்றால்தான் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். இதனால் உண்மையில் இந்த நிறுவனத்தின் தரப்பில் என்ன நடக்குதுன்னே தெரியவில்லை

திடீரென மிஸ் ஆன டேப்லட்-வாட்ச்

திடீரென மிஸ் ஆன டேப்லட்-வாட்ச்

‘சாம்ப் ஒன் c1' நிறுவனம் முதலில் ரிஜிஸ்டரேஷனை தொடங்கியபோது ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டேப்ளட் மற்றும் வாட்ச் ஆகியவற்றையும் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய அனுமதித்தது. ஆனால் தற்போது அதன் இணையதளத்தில் மேற்கண்ட இரண்டும் திடீரென மிஸ் ஆகியுள்ளது. இதற்கு சரியான விளக்கமும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை

என்னென்ன அம்சங்கள் உள்ளது?

என்னென்ன அம்சங்கள் உள்ளது?

‘சாம்ப் ஒன் c1' ஸ்மார்ட்போனில் 5 இன்ச் ஸ்க்ரீன், 1.3GHz குவாட் கோர் பிராசஸர், 8MP பின்கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா, பிங்கர் பிரிண்ட் வசதி மற்றும் 2GB ரேம் ஆகிய வசதிகள் உள்ளன.

Best Mobiles in India

English summary
ChampOne C1 smartphone priced at Rs 501 was creating a buzz in the Indian market. Now, the first flash sale of the smartphone has been delayed and there is no word on when it will be sold. Take a look!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X