CES 2022: பட்ஜெட் விலையில் நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது நோக்கியா.!

|

இப்போது நடந்துகொண்டிருக்கும் CES 2022 தொழில்நுட்ப கண்காட்சியில் எச்எம்டி குளோபல் நிறுவனம் நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா சி100, நோக்கியா சி200, நோக்கியா ஜி100, நோக்கியா ஜி400 ஆகிய நான்கு சாதனங்களை தான் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ப்போது இந்த சாதனங்களின் அம்சங்கள்

குறிப்பாக இந்த நான்கு சாதனங்களும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இப்போதுஇந்த சாதனங்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 32எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகம்- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை இதோ!120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 32எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகம்- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி விலை இதோ!

நோக்கியா சி100, நோக்கியா சி200 அம்சங்கள்

நோக்கியா சி100, நோக்கியா சி200 அம்சங்கள்

நோக்கியா சி100 மற்றும் நோக்கியா சி200 ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளன. பின்பு நோக்கியா சி200 ஸ்மார்ட்போனில் 6.1-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களே- உங்களுக்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்: வருடம் முழுவதும் உங்க நேரம்தான்!ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களே- உங்களுக்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்: வருடம் முழுவதும் உங்க நேரம்தான்!

க்கியா சி100, நோக்கியா சி200

அதேபோல் நோக்கியா சி100, நோக்கியா சி200 ஸ்மார்ட்போன்கள் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளன. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனங்கள். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.700 விலையில் புது போன்.. ஆண்ட்ராய்டு போனின் விலை கூட இவ்வளவு குறைவாக எங்கும் கிடைக்காது..வெறும் ரூ.700 விலையில் புது போன்.. ஆண்ட்ராய்டு போனின் விலை கூட இவ்வளவு குறைவாக எங்கும் கிடைக்காது..

நோக்கியா சி100, நோக்கியா சி200 விலை

நோக்கியா சி100, நோக்கியா சி200 விலை

மேலும் நோக்கியா சி100, நோக்கியா சி200 ஸ்மார்ட்போன்களில் 4000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்

நோக்கியா சி100 ஸ்மார்ட்போனின் விலை $99 (இந்திய மதிப்பில் ரூ.7,300) ஆக உள்ளது. அதேபோல் நோக்கியா சி200 ஸ்மார்ட்போனின் விலை $119 (இந்திய மதிப்பில் ரூ.8,800) ஆக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.26 திட்டம்: 2ஜிபி டேட்டா.. வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா? இது சூப்பர்ஹிட் ரீசார்ஜ்..ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.26 திட்டம்: 2ஜிபி டேட்டா.. வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா? இது சூப்பர்ஹிட் ரீசார்ஜ்..

 நோக்கியா ஜி100, நோக்கியா ஜி400 அம்சங்கள்

நோக்கியா ஜி100, நோக்கியா ஜி400 அம்சங்கள்

நோக்கியா ஜி100 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் நோக்கியா ஜி100 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 சிப்செட் வசதி உள்ளது. பின்பு இந்த நோக்கியா ஜி100 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் உள்ளன. குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஜி100 ஸ்மார்ட்போன் மாடல்.

டெஸ்லாவை ஆளப்போகும் இந்தியர்- ஆட்டோபைலர் பிரிவின் முதல் ஊழியரான தமிழன் அசோக்: எலான்மஸ்க் பெருமிதம்!டெஸ்லாவை ஆளப்போகும் இந்தியர்- ஆட்டோபைலர் பிரிவின் முதல் ஊழியரான தமிழன் அசோக்: எலான்மஸ்க் பெருமிதம்!

 நோக்கியா ஜி400 ஸ்மா

நோக்கியா ஜி400 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக பெரிய டிஸ்பிளே மற்றும்120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4805ஜி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி400 மாடல். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரிவசதியுடன் இந்த நோக்கியா ஜி400 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா ஜி400 ஸ்மாரட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. அதாவது மேக்ரோ கேமரா, அல்ட்ரா வைடு கேமரா ஆதரவுகளும் இவற்றுள் உள்ளன.

ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் வீணாகிறதா? இப்படி செஞ்சு பாருங்க.. பணமும் வீணாகாது பயணமும் செய்யலாம்..ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் வீணாகிறதா? இப்படி செஞ்சு பாருங்க.. பணமும் வீணாகாது பயணமும் செய்யலாம்..

நோக்கியா ஜி100, நோக்கியா ஜி400 விலை

நோக்கியா ஜி100, நோக்கியா ஜி400 விலை

நோக்கியா ஜி100 ஸ்மார்ட்போனின் விலை $149 (இந்திய மதிப்பில் ரூ.11,000) ஆக உள்ளது. அதேபோல் நோக்கியா ஜி400 ஸ்மார்ட்போனின் விலை $239 (இந்திய மதிப்பில் ரூ.17,800) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
CES 2022: Nokia launches Four Budget Smartphones! : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X