இரட்டை 12 எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி - அசுஸ் சென்போன் 3 ஸூம்.!

சிஇஎஸ் 2017-ல் அசுஸ் அதன் சென்போன் 3 ஸூம் கருவியை வெளியிட்டுள்ளது அதன் சிறப்பம்சங்கள் பற்றிய தொகுப்பே இது.

|

நெவேடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும் ஒரு உலக நுகர்வோர் மின்னணு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தக காட்சி, இந்தாண்டும் சிஇஎஸ் 2017 என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த சிஇஎஸ் 2017-ல் அசுஸ் நிறுவனம் அதன் சென்போன் 3 ஸூம் கருவியை அறிமுகம் செய்துள்ளது.

இரட்டை 12 மெகாபிக்சல் கேமராக்கள் கொண்ட இருக்கருவி ஒரு 5.5 அங்குல ஸ்மார்ட்போன் ஆகும். அதுமட்டுமின்றி அசுஸ் நிறுவனம் இக்கருவிதான் ஒரு உயர் திறன் 5000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட உலகின் மிகவும் மெலிதான ஸ்மார்ட்போன் என்றும் கூறுகிறது. மேலும் சென்போன் 3 ஸூம் கருவியின் பிற சிறப்பம்சங்கள் பற்றி விவரமாக காண்போம்.

மிகவும் எளிது

மிகவும் எளிது

இதன் இரண்டு கேமராக்களில் ஒன்று 25 மிமீ மற்றும் மற்றொன்று 59 மிமீ ஆகும். பயனர் உடனடியாக ஒரு கேமராவில் இருந்து மற்ற கேமிராவிற்கு மாறிக் கொள்ளலாம், கேமராக்களில் ஒரு 2.3xஆப்டிகல் ஜூம் வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் தூரத்தில் உள்ள பொருட்களை புகைப்படமாக கைப்பற்றுவது மிகவும் எளிதாகும்.

ட்ரைடெக்+ ஆட்டோபோகஸ் சிஸ்டம்

ட்ரைடெக்+ ஆட்டோபோகஸ் சிஸ்டம்

இக்கருவியில் ட்ரைடெக்+ ஆட்டோபோகஸ் சிஸ்டம் அதாவது மூன்று ஆட்டோபோகஸ் தொழில்நுட்பங்களில் ஒன்றை தேர்வு செய்யும் அம்சம் உள்ளது. இதன் மூலமா இரட்டை பிக்சல் பிடிஏஎப், சப்ஜெக்ட் ட்ராக்கிங் ஆட்டோபோகஸ் மற்றும் லேசர் போகஸ் ஆகியவைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும்.

0.03 நொடிகளில்

0.03 நொடிகளில்

புகைப்படம் எடுக்க முயலும் பொருளானது இயக்கத்தில் இருந்தாலும் அதாவது அசைவில் இருந்தாலும் கூட ஆட்டோபோகஸ் தேர்ந்தெடுப்பு 0.03 நொடிகளில் நிகழ்ந்து ஒரு தெளிவான படத்தை அடையும்.

சூப்பர்பிக்சல் தொழில்நுட்பம்

சூப்பர்பிக்சல் தொழில்நுட்பம்

குறைந்த ஒளி புகைப்படம், இரைச்சல் குறைப்பு போஸ்ட் புரொடக்ஷ்ன் ஆகிய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் மூலம் தானாகவே செய்யப்படும். அசுஸ் சூப்பர்பிக்சல் தொழில்நுட்பமானது ஆப்பிள் ஐபோன் 7 கருவியை விட 2 மடங்கு அதிக ஒளி உணர்திறன் மற்றும் வழக்கமான ஸ்மார்ட்போன்களை விட பத்து மடங்கு அதிக ஒளி உணர்திறன் அனுமதிக்கிறது.

ஒரு தொழில்முறை கேமரா

ஒரு தொழில்முறை கேமரா

பயனர்கள் ஷட்டர் வேகம், இவி, ஐஎஸ்ஓ மற்றும் மீட்டரிங் போன்ற செட்டிங்ஸ்களை ஒரு தொடுதல் கையேடு அமைப்புகளை கொண்டு ஒரு தொழில்முறை கேமராவை போல இந்த சாதனத்தை கட்டுப்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மேம்படுத்தல் நிகழ்த்திய பின்னர் இக்கருவி மூலமா பயனர்கள் ரா (RAW) படங்களை கைப்பற்ற முடியும்.

இரண்டு பவர்பேங்கிற்கு சமம்

இரண்டு பவர்பேங்கிற்கு சமம்

மெலிதான 7.9எம்எம் வடிவம் கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரி, 48 மணி நேர பேச்சு நேரம், ஒரு நம்பமுடியாத 42 நாட்கள் காத்திருப்பு நேரம் கொண்டுள்ள இக்கருவி இரண்டு பவர்பேங்கிற்கு சமம் என்பதால் இதில் பிற ஸ்மார்ட்போன்களையும் சார்ஜ் செய்ய முடியும்.

முழு உலோக உடல்

முழு உலோக உடல்

கேமரா சார்ந்த இதன் உயர் திறன் பேட்டரி நீண்ட நேர ஷூட்டிங் செய்ய அனுமதிக்கிறது, ஒரு முழுமையான சார்ஜ் ஆனது தொடர்ச்சியான 6.4 மணி நேர 4கே யூஎச்டி வீடியோ ஷூட் செய்ய அனுமதிக்கும். ஒரு முழு உலோக உடல் கொண்டிருந்தாலும் இதன் 170 கிராம் எடையே கொண்டுள்ளது.

வெறும் ஐந்து நிமிட சார்ஜ்

வெறும் ஐந்து நிமிட சார்ஜ்

இக்கருவி ஒரு சக்தி வாய்ந்த மற்றும் திறமையான 64-பிட், 2.0ஜிகாஹெர்ட்ஸ், அக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டுள்ளது. உடன் இரட்டை சிம் கார்டு ஆதரவும் அளிக்கிறது. இதன் துரிதப்படுத்திய சார்ஜ் அம்சம் மூலம் வெறும் ஐந்து நிமிட சார்ஜ் ஆனது 2 மணி நேர டாக்டைம் வழங்குகிறது.

பிற அம்சங்கள்

பிற அம்சங்கள்

- 4 ஜிபி மெமரி
- அட்ரெனோ 506 ஜிபியூ
- பைவ் மேக்னட் ஸ்பீக்கர் கட்டுமானம்
- 5.5 அங்குல (1920 x 1080) முழு எச்டி தீர்மானம்
- 500 பிரைட்னஸ் ரேட்டிங்
- சமீபத்திய கொரில்லா கண்ணாடி 5

மேலும் படிக்க

மேலும் படிக்க

மலிவு விலையில் டூவல் ரியர் கேமிரா, நீண்ட பேட்டரி கொண்ட ஹானர் 6எக்ஸ்.!

Best Mobiles in India

English summary
CES 2017: ASUS reveals the ZenFone 3 Zoom with dual 12 MP cameras. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X