நினைச்சத விட ரூ.15,000 கம்மி.. மக்கள் போட்டி போட்டுக்கிட்டு.. Nothing Phone 2a-வை ஆர்டர் போட போறாங்க!
நத்திங் பிராண்டின் சிஇஓ-வான கார்ல் பெய் (Carl Pei), தனது நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2எ (Nothing Phone 2a) மாடலின் இந்திய விலை நிர்ணயத்தை வெளிப்படுத்தி உள்ளார். சுவாரசியமாக இது எதிர்பார்த்ததை விட ரூ.15,000 மலிவானதாக இருக்கிறது.
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன், மார்ச் 5 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாகவே நத்திங் போன் 2ஏ-வின் சில முக்கிய அம்சங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில்.. தற்போது நத்திங் போன் 2ஏ-வின் இந்திய விலை நிர்ணயமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களுடன் உரையாடும் ஒரு வீடியோவில், இந்தியாவில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.25,000 ஆக இருக்குமென்று கார்ல் பெய் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக இது ரூ.40,000 க்கும் அதிகமான விலை அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட இது ரூ.15,000 மலிவான விலைக்கு வரும் என்பது போல் தெரிகிறது.
ரூ.25,000 என்பது நத்திங் போன் 2ஏ-வின் சரியான விலை அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ரூ.25,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வரும் என்றே நாம் அர்த்தம்கொள்ள வேண்டும். மார்ச் 5 நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது தான் இந்த ஸ்மார்ட்போனின் சரியான விலை மற்றும் விரிவான அம்சங்கள் வெளிப்படுத்தப்படும்.

அறியாதோர்களுக்கு நத்திங் போன் 2ஏ-வின் வெளியீட்டு நிகழ்வு டெல்லியில் நடக்கவுள்ளது. இந்நிகழ்வை ஆன்லைன் வழியாக நேரலையில் பார்க்க விரும்புபவர்கள், மார்ச் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலை (Nothing YouTube Channel) அணுகலாம்.
நத்திங் போன் 2ஏ-வில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ சிப்செட் (MediaTek Dimensity 7200 Pro SoC) மூலம் இயக்கப்படும்.

கேமராக்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஆனது 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்.
இதுதவிர்த்து நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் ரேம் பூஸ்டருடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங்ஓஎஸ் 2.5 (NothingOS 2.5) உடன் வரலாம். கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
மார்ச் 5-ல் அறிமுகமாகும் இன்னொரு ஸ்மார்ட்போன்: நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனை தவிர்த்து மார்ச் 5 ஆம் தேதியன்று லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இது மார்ச் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எக்ஸ் (X) தளம் வழியாக லாவா நிறுவனம் அறிவித்துள்ளது.
லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தும் போஸ்டர் புகைப்படத்தின் வழியாக, இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் (Triple rear camera unit) மற்றும் கவ்ர்டு ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே (Curved hole-punch display) இடம்பெறுவதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.
இதில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 64 மெகாபிக்சல் மெயின் சோனி சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








