மலிவு விலையில் சென்ட்ரிக் எல்3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சென்ட்ரிக் எல்3 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இந்திய மொபைல் தயாரிப்பாளரான சென்ட்ரிக் மொபைல்ஸ் நிறுவனம் தற்சமயம் மலிவு விலையில் சென்ட்ரிக் எல்3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
குவார்ட்ஸ் சாம்பல் மற்றும் ரெய்ஸின் பிளாக் வண்ண விருப்பங்கள் கொண்டு இந்த சென்ட்ரிக் எல்3 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது சென்ட்ரிக் எல்3 ஸ்மார்ட்போன்.

சென்ட்ரிக் எல்3 :
சென்ட்ரிக் எல்3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
சென்ட்ரிக் எல்3 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை ஸ்கேனர், வைபை 802.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3050எம்ஏஎச்:
சென்ட்ரிக் எல்3 ஸ்மார்ட்போனில் 3050எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
சென்ட்ரிக் எல்3 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.6,749- எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications