செல்கான் விண்டோஸ் போன் ரூ. 4,999, விலை குறைந்த விண்டோஸ் போனும் இது தாங்க...

By Meganathan
|

செல்கான் நிறுவனத்தின் முதல் விண்டோஸ் போன் 8.1 ரூ.4,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. நோக்கியா லூமியா 530 மாடலை விட குறைந்த விலையில் உலகின் விலை குறைந்த விண்டோஸ் போன் என்ற பெருமையை செல்கான் வின் 400 பெற்றுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட நோக்கியா லூமியா 530 ரூ.5,500 க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது செல்கான் வின் 400 ரூ.500 குறைவாக வெளியிட்டு விலை குறைந்த விண்டோஸ் போனாக உள்ளது.

செல்கான் விண்டோஸ் போன் ரூ. 4,999 தாங்க

லூமியா 530யுடன் ஒப்பிடும் போது வின் 400 போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் பெரிதாக செய்யப்படவில்லை, ஆனால் செல்கான் ரூ. 5,000 விலையில் சிறந்த சிறப்பம்சங்களை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

செல்கான் விண்டோஸ் போன் ரூ. 4,999 தாங்க

வின் 400, 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 200 எஸ்ஓசி பிராசஸர் மற்றும் 512 எம்பி ராமும் விண்டோஸ் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. மெமரியை பொருத்த வரை 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

செல்கான் விண்டோஸ் போன் ரூ. 4,999 தாங்க

கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 5 எம்பி ப்ரைமரி கேமராவும் 1.3 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. மேலும் டூயல் சிம், 3ஜி, ப்ளூடூத் வைபை வசதிகள் இருப்பதோடு 1500 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டபடுகின்றது. கருப்பு நிற வின்400 தற்போது ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் ரூ.4,702 க்கு கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Celkon Windows phone Win400 Launched for Rs. 4,999. Celkon launched the company’s first Windows Phone 8.1-based smartphone Win 400 for just Rs 4,999. The device becomes the world’s most affordable Windows smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X