ரூ.5999 க்கு கிட்காட் ஆன்டிராய்டு போன் - செல்கான் சிக்னேச்சர் டூ ஏ500 சிறப்பம்சங்கள்

Posted By:

இம்மாதம் பெங்களூரில் நடைபெற்ற விழாவில் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்மார்ட் போன் நிறுவனமான செல்கான் சிக்னேச்சர் டூ ஏ500 மாடல் போன்களை வெளியிட்டது. 5 இன்ச் திரை மற்றும் 1 ஜி.பி ராம் வசதியுடன் சந்தையில் வெளியான குறைந்த விலை போன் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளிப்கார்ட் மூலம் விற்பனையை தொடங்கியிருப்பதோடு கருப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் இலவச ப்ளிப் கவருடன் கிடைக்கின்றது.

வியக்கவைக்கும் சிறப்பம்சங்களுடன் குறைந்த விலையில் வெளியானாலும் சந்தையில் இருக்கும் மோட்டோ ஈ, ஏசுஸ் சென்போன் 4 மாடல்கள் கடும் போட்டியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

ரூ.5999 க்கு கிட்காட் ஆன்டிராய்டு போன்

செல்கான் சிக்னேச்சர் டூ ஏ500 போனின் சிறப்பம்சங்கள்

செல்கான் சிக்னேச்சர் டூ ஏ500 போன் 5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் 1.3 டூயல் கோர் மீடியா டெக் பிராசஸருடன் கிட்கேட் ஆன்டிராய்டு ஓ.எஸ் மற்றும் 1 ஜி.பி ராம் பொருத்தப்பட்டுள்ளது.

எல்இ.டி பிளாளஷுடன் 5 எம்.பி கேமரா மற்றும் 0.3 எம்.பி முன் கேமராவும் உள்ளது. 8 ஜி.பி இன்டர்னல் மெமரி தேவைப்பட்டால் 32 ஜி.பி வரை உயர்த்திக்கொள்ளும் வசதியும் செல்கான் கொடுத்துள்ளது. இணைப்பு வசதிகளுக்காக 3ஜி, வை.பை, ப்ளூடூத், ஜி.பி.எஸ் மற்றும் டூயல் சிம் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 9.9 எம்.எம் தட்டையாகவும் 147 கிராம் எடையுடன் 2000 எம்.எஹ் பாட்டரி மூலம் சக்தியூட்டப்படுவது குறிப்பிடத்தக்கதது.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/8II5Sa-F0i0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
Celkon Mobiles Launched Signature Two A500 For Rs.5999
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot