குறைந்த விலையில் புதிய செல்கான் மொபைல்!

2.4 இஞ்ச் திரை வசதி மூலம் இந்த மொபைல் டிஎப்டி தொடுதிரை வசதியையும் இது வழங்கும். இந்த திரை 240 X 320 திரை துல்லியத்தையும் கொடுக்கும். டியூவல் சிம் நெட்வொர்க் மட்டும் அல்லால் டியூவல் கேமராவையும் வாடிக்கையாளர்களுக்கு தரும் அருமையான தொழில் நுட்பத்தில் இந்த மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது. 2 மெகா பிக்ஸல் கொண்ட மெயின் கேமராவினையும், செகன்டரி கேமராவினையும் இந்த மொபைல் வழங்கும்.
இதன் 2 மெகா பிக்ஸல் கேமரா மூலம் 1600 X 1200 துல்லியத்தினை பெறலாம். இதன் மெமரி வசதியை 16எம்பி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்தி கொள்ளலாம். ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த மொபைல் மல்டி மீடியா பிளேயர் வசதிக்கும் சப்போர்ட் செய்யும். இதன் 1,000 எம்ஏஎச் பேட்டரி அதிகபட்சம் 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 400 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் கொடுக்கும். இந்த டியூவல் சிம் வசதி கொண்ட செல்கான் சி-999 மொபைலை ரூ.5,000 விலைக்குள் பெறலாம்.


Click it and Unblock the Notifications