Home
Mobile

ஏஐ பாராட்டு தின கொண்டாட்டம்: OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

ஏஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆனது கடந்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் இடத்திற்கு வந்துவிட்டது மற்றும் ஏஐ ஆனது ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே வருகிறது. ஜூலை 16 ஆம் தேதி உலக ஏஐ பாராட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆக ​​OPPO நிறுவனத்தின் லேட்டஸ்ட் Reno12 சீரீஸை பார்ப்பதற்கு இதைவிட சிறந்த நேரம் எதுவும் இருக்காது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன்கள் தான், அதன் பரந்த அளவிலான ஏஐ திறன்களின் வழியாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

OPPO Reno சீரீஸ் ஆனது ஸ்மார்ட்போன் துறையில் புதுமைக்கான முன்னோடியாக உள்ளது. இருப்பினும், 'சீம்லெஸ்' என்பது Reno சீரிஸின் கீழ் சமீபத்தில் அறிமுகமான OPPO Reno12 சீரீஸின் பெயராகும். எனவே, எந்த தாமதமும் இன்றி, உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்த, இந்த சீரீஸின் ஒவ்வொரு அம்சத்திலும் OPPO AI ஆனது எவ்வாறு தடையின்றி ஒருங்கிணைக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

ஸ்டெல்லர் ஆப்டிக்ஸ் ஏஐ இன்டெலிஜென்ஸை சந்திக்கிறது

Reno12 Pro ஆனது ஓஐஎஸ் உடனான 50எம்பி சோனி எல்ஒய்டி-600 ப்ரைமரி சென்சார், 112° ஃபீல்ட் ஆஃப் வியூ உடனான 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 50எம்பி சாம்சங் எஸ்பிஎச்ஓகேஜேஎன்5 டெலி போன்ற மூன்று பல்துறை சென்சார்களை கொண்டுள்ளது. கடைசியாக, செல்பீ கேமராவில் ஆட்டோ ஃபோகஸ் உடனான 50எம்பி சாம்சங் எஸ்5கேஜேஎன்5 சென்சார் பயன்படுத்துகிறது. முன் மற்றும் பின்புற கேமராக்கள் ஆகிய இரண்டிலும் 4கே வீடியோ பதிவிற்கான ஆதரவு உள்ளது.

மறுகையில் உள்ள OPPO Reno12 ஆனது ப்ரைமரி மற்றும் அல்ட்ராவைட் கேமராக்களில் அதன் 'ப்ரோ' மாடலில் உள்ள சென்சார்களை கொண்டுள்ளது. மேலும் டெலிஃபோட்டோ லென்ஸுக்குப் பதிலாக 2எம்பி ஓவி02பி10 மேக்ரோ சென்சாரை பெறுகிறது. மேலும், OPPO Reno12 சீரீஸில் தொடரில் ஃப்ளாஷ் ஸ்னாப்ஷாட் மற்றும் ஏஐ-இன்டெக்ரேடட் அல்ட்ரா-கிளியர் போர்ட்ரெய்ட் சிஸ்டம் ஆகியவைகள் படத்தின் தரம் மற்றும் புகைப்படத்தை மேம்படுத்துகின்றன. அவுட்புட்களை இன்னும் அருமையாக்க OPPO Reno12 சீரீஸில் சில கேமரா ஏஐ அம்சங்களும் உள்ளன.

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

1. ஏஐ ஏரேசர் 2.0: இது ஜெனரேட்டிவ் ஏஐ-ஐ பயன்படுத்தி, தேவையற்ற பேக்கிரவுண்ட் பொருட்களையும் மக்களையும் நீக்கி, இடத்தை துல்லியமாக நிரப்புகிறது.

2. ஏஐ கிளியர் ஃபேஸ்: இது 10 பேர் வரையிலான முக விவரங்களை விரைவாகவும் தனிப்பட்ட முறையிலும் செம்மைப்படுத்துவதன் மூலம் க்ரூப் செல்பீக்களை மேம்படுத்துகிறது.

3. ஏஐ பெஸ்ட் ஃபேஸ்: இது ஏஐஜிசி-ஐ பயன்படுத்தி க்ரூப் போட்டோக்களில் மூடிய கண் வெளிப்பாடுகளை கண்டறிந்து சரிசெய்கிறது.

4. ஏஐ ஸ்டுடியோ: இது புகைப்படங்களை டிஜிட்டல் அவதாரங்களாக அல்லது பல்வேறு வடிவங்களில் ப்ரொஃபைல் படங்களாக மாற்றுகிறது, இது ஒரு தனித்துவமான டிஜிட்டல் ஆளுமையை வழங்குகிறது. எச்டிஎம்எல்5 லிங்க் வழியிலான இன்ட்டராக்டிவ் ஷேரிங் மூலம் க்ராஸ்-பிராண்ட் போன் இன்ட்டராக்டிவிட்டியை மேம்படுத்துகிறது.

5. செல்பீக்களுக்கான ஏஐ போர்ட்ரெய்ட் ரீடச்சிங்: இது இயற்கையான எபெக்ட்களுக்கு முக அம்சங்களை தானாகவே சரிசெய்கிறது, நிகழ்நேரத்தில் 296 முக அம்சங்களை மேம்படுத்துகிறது. இதிலுள்ள நேச்சுரல் டோன் அம்சம் பல்வேறு காட்சிகளில் யதார்த்தமான லைட்டிங் மற்றும் ஸ்கின் டோன்களுக்கான வெளிப்பாட்டை புத்திசாலித்தனமாக சரிசெய்கிறது.

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

நீண்ட கால நம்பகத்தன்மைக்கான செயல்திறன் கொண்டது:
OPPO Reno12 சீரிஸ் ஆனது பல்வேறு வேலைகளுக்கு மற்றும் கேமிங் வசதிகளுக்கு தகுந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் வசதியை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கூடுதலாக மீடியாடெக் என்பியு 655 ஆதரவுடன் இந்த Reno12 சீரிஸ் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது மேம்பட்ட ஏஐ அமச்களுடன்இந்த போன்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் Reno12 சீரிஸ் ரேம்-விட்டா தொழில்நுட்பம் ஆனது டிரினிட்டி எஞ்சின் மற்றும் ரேம் விரிவாக்கம் போன்றவற்றில் செயல்படுகிறது. மேலும் இவை மேம்பட்ட செயல்திறன் மாற்றங்களையும் வழங்கும்.

மென்பொருள் தான் ஸ்மார்ட்போனின் முக்கிய பகுதியாகும். அதனால் தான் Reno12 சீரிஸ் போன்கள் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான சமீபத்திய கலர்ஓஎஸ் 14.1 உடன் வெளிவந்துள்ளது. இது பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய OPPO போன்களுக்கு மூன்று வருட மென்பொருள் அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என ஒப்போ நிறுவனம் உறுதியளிக்கிறது.

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

OPPO Reno12 மாடல்களின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், எஐ வசதி தான். தான். அதாவது கூகுள் ஜெமினியால் இயக்கப்படும் ஒப்போ ஏஐ டூல்பாக்ஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய OPPO போன்கள். இது தினசரி ஸ்மார்ட்போன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய விஷயங்களைப் பரிந்துரைக்கும் இந்த ஏஐ டூல்.

6.அதேபோல் சமூக ஊடக பிரியர்களுக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற போஸ்ட் தளங்களில் முக்கியமான பதிவுகளை வெளியிட இந்த போன்களில் உள்ள ஏஐ ரைட்டர் அம்சம் உதவுகிறது.

7.ஏஐ ஸ்பீக் என்பது ஒரு மேம்பட்ட உரையிலிருந்து பேச்சு அம்சமாகும், இது உங்கள் கட்டுரைகளைப் படிக்க முடியும்.

8.ஏஐ சம்மரி ஆனது எந்த பிரவுசரிலும் விரைவான கட்டுரை சுருக்கங்களை வழங்குகிறது.

9.கூகுளின் ஜெமினி அல்ட்ராவால் இயக்கப்படும் ஏஐ ரெக்கார்டு சம்மரி ஆனது இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை ஆதரிக்கும், அதே வேளையில், மீட்டிங் அல்லது குறிப்புகளை டிரான்ஸ்கிரிப்ட் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

இன்டலிஜென்ட் மற்றும் ரிலையபிள்

கனெக்டிவிட்டி என்பது மிகவும் வசதியான அனுபவத்தை வழங்க OPPO அதன் ஏஐ திறமையை பயன்படுத்திய மற்றொரு பகுதியாகும்.

10. ஏஐ லிங்க்பூஸ்ட் ஆனது புத்திசாலித்தனமாக நெட்வொர்க் நிலைமைகளை அங்கீகரிக்கிறது மற்றும் வலுவான மற்றும் நம்பகமான செயல்திறனை உறுதிப்படுத்த இணைப்புகளை தடையின்றி மாற்றுகிறது. OPPO Reno12 சீரிஸ் ஆனது டியுவி ரெயின்லேண்ட் இடமிருந்து உயர் நெட்வொர்க் செயல்திறன் சான்றிதழை பெற்ற முதல் சீரிஸாகும். பல நாடுகளில் தகவல்தொடர்பு கள சோதனைகள் மற்றும் மென்பொருள் டியூனிங் மூலம் OPPO இதை அடைந்தது.

11. பீக்கன்லிங் தொழில்நுட்பம் ஆனது, தொலைதூரப் பகுதிகள் அல்லது நெரிசலான நிகழ்வுகளுக்கு ஏற்றது, நெட்வொர்க் சிக்னல் இல்லாமல் நீண்ட தூரத்திற்கு ப்ளூடூத் வழியாக வாய்ஸ் கால்களை செயல்படுத்துகிறது.

12. ஏஐ கிளியர் வாய்ஸ் தொழில்நுட்பம் ஆனது தெளிவான தகவல்தொடர்புகளை உறுதிப்படுத்த பேங்கிரவுண்ட் நாய்ஸ்களை பில்டர் செய்கிறது.

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

அழகு மற்றும் துணிச்சல், ஓர் பர்ஃபெக்ட் காம்பினேஷன்
ஏஐ-க்கு அப்பால், Reno12 சீரிஸ் ஆனது அழகு மற்றும் துணிச்சலை ஒருங்கிணைக்கிறது, இது ஒரு கரடுமுரடான வெளிப்புறத்துடன் ஏரோஸ்பேஸ்-கிரேடு வலிமை மற்றும் ஷாக் அப்சார்ப்ஷனுக்கான தனிப்பயனாக்கப்பட்ட குஷனிங் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது பிரீமியம் செயல்திறன் 5 ஸ்டார் மல்டி-சீன் பாதுகாப்பிற்கான எஸ்ஜிஎஸ் சான்றிதழை பெற்றுள்ளது, இதில் ஸ்பிளாஸ் டச் அம்சத்துடன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. நீடித்து நிலைத்தாலும், Reno12 ப்ரோ அதன் சன்செட் கோல்டு மற்றும் ஸ்பேஸ் பிரவுன் ஷேட்களுடன் நேர்த்தியாக உள்ளது, அதே சமயம் Reno12 சன்செட் பீச், மேட் பிரவுன் மற்றும் ஆஸ்ட்ரோ சில்வர் ஆகியவற்றில் வருகிறது. மேலும், Reno12 ப்ரோ ஒரு ரீபைன்டு டூ-டோன் ஃபினிஷ், ஒரு நேர்த்தியான 7.4மிமீ மெல்லிய பாடி மற்றும் வெறும் 180 கிராம் எடையும் கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், Reno12 சீரிஸ் ஆனது 120ஹெட்ஸ் வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10/எச்டிஆர்10பிளஸ் ஆதரவுடன் 6.7-இன்ச் ஃபுல்எச்டிபிள் குவாட் கர்வ்ட் இன்பினிட் வியூ ஸ்கிரீனை வழங்குகிறது. Reno12 ப்ரோவில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு மற்றும் Reno12-இல் கார்னிங் கொரில்லா கிளஸ் 7ஐ உடன் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. 80வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் ஃபிளாஷ் சார்ஜ் மூலம் ஆதரிக்கப்படும் 5,000எம்ஏஎச் பேட்டரி உடனான நீண்ட பேட்டரி ஆயுட்காலம் தொடரின் சிறப்பம்சமாகும், மேலும் இது நான்கு வருட ப்ளூயிட் பர்ஃபாமென்ஸை உறுதியளிக்கிறது.

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

OPPO Reno12 சீரிஸ்: எங்களது முடிவு
உலகம் ஏஐ-யை சுற்றி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஏஐ அப்ரிசேஷன் தினத்தில் ஸ்மார்ட்போன் துறையில் ஏஐ-இன் நீடித்த தாக்கத்தை அங்கீகரித்து கொண்டாட இது ஒரு சிறந்த நேரமாகும். OPPO Reno12 சீரிஸில் உள்ள தடையற்ற 12 அற்புதமான ஏஐ அம்சங்கள், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதை மாற்றியமைத்துள்ளது. இந்த சீரிஸில் உள்ள ஏஐ அம்சங்கள் அந்தந்த பிரிவுகளில் முதன்மையானது மற்றும் சாப்ட்வேர் கண்டுபிடிப்புகளின் எல்லைகளுக்கு கொண்டுசெல்கின்றன. OPPO Reno12 சீரிஸில் உள்ள இந்த 12 ஏஐ அம்சங்கள், உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் நிழலில் இயங்குகின்றன, மேலும் சிக்கலான மற்றும் அலுப்பான பணிகளை மிகவும் வசதியாக்குகிறது.

மேலும், ஸ்மார்ட்போன்கள் முழுவதும் பயன்படுத்தப்படும் நுண்ணறிவு ஏஐ ஒருங்கிணைப்பு, அதன் ஹார்ட்வேரை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது. கேமரா அமைப்பில் இது மிகவும் தெளிவாக தெரிகிறது, அங்கு ஏஐ அம்சங்கள் அதன் பல்துறை கேமரா சென்சார்களில் சிறந்த தர முடிவுகளை வழங்குவதன் மூலம் அடுத்த நிலைக்கு கொண்டுசெல்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சீரிஸ் ஆனது ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் எலிமென்ட்களை நேர்த்தியான மற்றும் ஸ்டைலான ஸ்மார்ட்போன்களில் ஒருங்கிணைக்கிறது, இது ஒரு நீடித்த வெளிப்புறத்தை பெருமைப்படுத்துகிறது, இது OPPO Reno12 சீரிஸை ஒரு அற்புதமான தொழில்நுட்ப அனுபவமாக மாற்றுகிறது.

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

OPPO Reno12 ப்ரோ விலை மற்றும் இந்தியா அவைலபிலிட்டி
OPPO Reno12 ப்ரோ ஆனது இந்தியாவில் 12ஜிபி/256ஜிபி கான்பிகிரேஷனுக்கு ரூ.36,999 தொடக்க விலையை கொண்டுள்ளது. கூடுதலாக, OPPO-இன் சமீபத்திய Reno ஸ்மார்ட்போனின் 12ஜிபி/512ஜிபி கான்பிகிரேஷனுக்கு வருகிறது, இதன் விலை ரூ.40,999. மறுபுறம் OPPO Reno12 8ஜிபி/256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.32,999. OPPO Reno12 ப்ரோ ஆனது இந்தியாவில் ஜூலை 18 முதல் விற்பனைக்கு வருகிறது மற்றும் Reno12 ஜூலை 25 முதல் பிளிப்கார்ட், முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் OPPO இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வருகிறது. ரெனோ சீரிஸ் விற்பனையில் வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய பல சலுகைகளும் உள்ளன.

OPPO Reno12 சீரீஸின் 12 அற்புதமான ஏஐ அம்சங்கள்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Celebrating AI Appreciation Day 12 Groundbreaking AI Features in the OPPO Reno12 Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X