சிடிஎம்ஏ வசதியில் புதிய நோக்கியா லுமியா-800-சி ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
சிடிஎம்ஏ வசதியில் புதிய நோக்கியா லுமியா-800-சி ஸ்மார்ட்போன்!
இதுவரை சிறந்த விற்பனையை கொடுத்து வருகிறது நோக்கியா லுமியா சிரீஸ் மொபைல்கள். லுமியா-800-சி என்ற ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது நோக்கியா நிறுவனம்.  லுமியா-800-சி ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ வசதி கொண்டதாக இருக்கும். 3.7 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பான தொழில் நுட்பத்தினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்று நம்பிக்கையுடன் கூறலாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். கியூவல்காம் எம்எஸ்எம்8255 சிப்செட் மற்றும் ஸ்னாப்டிராகன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸரையும் லுமியா-800-சி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

அட்ரினோ-205 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சிறப்பான தொழில் நுட்பம் நோக்கியா லுமியா-800-சி ஸ்மார்ட்போனின் மூலம் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனை பெற ரொம்ப நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாதத்தின் கடைசியில் லுமியா 800-சி ஸ்மார்ட்போன் வெளியிடப்படும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்