2 புதிய வெர்ஷன்களில் நோக்கியா சிம்பையான் ஓஎஸ்!

Posted By: Staff
2 புதிய வெர்ஷன்களில் நோக்கியா சிம்பையான் ஓஎஸ்!
சிம்பையான் இயங்குதளத்தில் இயங்கும் கார்லா மற்றும் டோனா என்ற இரண்டு புதிய வெர்ஷன்களை வழங்க உள்ளது நோக்கியா.

மெக்ஸிக்கோவில் நடந்த டெவலப்பர்ஸ் தினத்தில் இந்த சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷன்கள் பற்றிய செய்தி கசிந்துள்ளது.

இந்த செய்தி நோக்கியா வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது. சிம்பையான் கார்லா ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்ற இயங்குதளம் என்று கூறலாம்.

ஏனென்றால் அனைத்து வாடிக்கையாளர்களுமே ஸ்மார்ட்போன் என்றால் ஏராளமான வசதிகளை எதிர்பார்ப்பது வழக்கமான விஷயமாகிவிட்டது.

அந்த வகையில் இந்த புதிய கார்லா வெர்ஷன் சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம்  ஏமாற்றத்தை கொடுக்காது என்று நம்பப்படுகிறது. இந்த கார்லா இயங்குதளம் 1 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டு இயங்கும்.

இதில் இன்னும் சில மேம்படுத்திய அம்சங்களை கொடுக்க நோக்கியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது புதிய வெப் பிரவுசர் தொழில் நட்பத்துடன் வரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதோடு இணைந்து என்எஃப்சி தொழில் நுட்பம் வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

கார்லா வெர்ஷினில் மட்டும் தான் இது போன்ற தொழில் நுட்பங்கள் இருக்கும் என்று எண்ணி விட வேண்டாம். இது போன்று இன்னும் பல அரிய வசதிகள் டோனா வெர்ஷன் சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இருக்கும்.

சிம்பையான் டோனா வெர்ஷன் டியூவல் கோர் பிராசஸர் கொண்டு இயங்கும். இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்தினை நிச்சயம் பெற முடியும்.

புதிய சிம்பையான் கார்லா மொபைல் வரும் ஆண்டிலோ அல்லது 2013 ஆண்டிலோ வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. சிம்பையான் டோனா வெர்ஷன் 2014 ஆண்டில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனால், புதிய சிம்பையான் வெர்ஷன்கள் நோக்கியா வெளியிடுவதற்குள், ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதி நவீன மற்றும் புதுமையான தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்திவிடும் என்றும் கருதப்படுகிறது.

இருப்பினும், புதிய சிம்பையான் வெர்ஷன்களின் செயல் திறனை பற்றிய தகவல்களை முழுவதுமாக தெரிந்துகொள்ள இன்னும் கொஞ்சம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot