சீனாக்காரங்கள.. எவ்ளோ அடிச்சாலும் திருந்த மாட்டாங்க போல.. Nothing Phone 3 விலை லீக்.. எப்போது அறிமுகம்?
சமீபத்தில் அறிமுகமான நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பார்த்து.. "இப்போது தான்.. நத்திங் நிறுவனம் சரியான ட்ராக்கிற்கு வந்து இருக்கிறது.. அடுத்தடுத்த மாடல்களிலும் இதேபோன்ற விலை நிர்ணயத்தை பின்பற்றினால் மார்க்கெட்டில் மாஸ் காட்டலாம்!" என்று நினைத்தவர்களில் நீங்களும் ஒருவரா?
"ஆம்" என்றால் அந்த எண்ணத்தை அப்படியே அழித்து விடுங்கள். ஏனென்றால் "எவ்வளவு அடி வாங்கினாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க!" என்று கூறும் படியாக நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

என்ன மாடல்? கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் நிறுவனம் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் நத்திங் போன் 2ஏ மாடலை அறிமுகம் செய்து, இந்தியர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற கையோடு, தனது அடுத்த ஸ்மார்ட்போனான நத்திங் போன் 3 மாடலையும் அறிமுகம் செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.
எப்போது அறிமுகமாகும்? நேற்று வரையிலாக "விரைவில் அறிமுகமாகும்" என்று மட்டுமே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் சாத்தியமான விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி நத்திங் போன் 3 மாடாலானது ஜூலை 2024 இல் அல்லது அதற்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்படலாம்.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து நத்திங் போன் 3-வின் அம்சங்கள் பற்றி எந்தவொரு நம்பகமான தகவல்களும் இல்லை.
என்ன விலைக்கு வரும்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் "சாத்தியமான" இந்திய விலையானது ரூ.40,000 - ரூ.45,000 க்குள் இருக்க வாய்ப்புள்ளது. உண்மையிலேயே இது ஏமாற்றம் அளிக்கும் ஒரு விலை வரம்பாகும். ஏனென்றால் இதே விலைக்கு தான் (ரூ.44,999) நத்திங் போன் 2 அறிமுகமானது. பின்னர் :யாருமே கண்டுகொள்ளவில்லை" என்கிற காரணத்தினால் ரூ.5000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது.

அப்போதும் கூட நத்திங் போன் 2 -வின் வியாபாரம் டவுன் ஆகத்தான் இருந்தது. பின்னர் மீண்டும் விலைக்குறைப்பை பெற்று தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.36,999 க்கு (12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்) விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.45000 பட்ஜெட்டில் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தால்.. என்ன நடக்கும் என்று நத்திங் நிறுவனத்திற்கு நன்றாக தெரியும். இருந்தும் ரூ.45000 பட்ஜெட்டில் இன்னொரு மாடலை களமிறங்குகிறது என்றால்.. நக்கல் தானே!?
நத்திங் போன் 2 என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 கொண்டு இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளது.
முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா மற்றும் பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் உடனான கிளிஃப் இன்டர்ஃபேஸ் உடன் வரும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 5W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4700எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.
அடுத்த நத்திங் இயர்பட்ஸ் எப்போது அறிமுகமாகும்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக நத்திங் இயர் 3 டிடபுள்யூஎஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் (Nothing Ear 3 TWS Bluetooth earbuds) அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது குறித்த அதிகாரப்பூர்வ டீஸர்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன!


Click it and Unblock the Notifications