Home
Mobile

நீதான்யா நேர்மையான CEO.. கார்ல் பெய் சொன்ன தகவலால் புல்லரித்து போன Nothing Phone 1 பயனர்கள்!

நத்திங் (Nothing) நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2 (Nothing Phone 2) மாடலின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்ட கையோடு, நத்திங் போன் 1 (Nothing Phone 1) மாடலை வைத்து இருக்கும் பயனர்களுக்கு ஒரு "தரமான" குட் நியூஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால், நத்திங் போன் 1-க்கு நத்திங் நிறுவனத்தின் புதிய ஓஎஸ் வெர்ஷனான நத்திங் ஓஎஸ் 2.0 அப்டேட் (Nothing OS 2.0 Update) எப்போது கிடைக்கும் என்கிற தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கார்ல் பெய் (Nothing CEO Carl Pei) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கார்ல் பெய் சொன்ன தகவலால் புல்லரித்து போன Nothing Phone 1 பயனர்கள்!

நினைவூட்டும் வண்ணம், நத்திங் போன் 1-ஐ அறிமுகப்படுத்தும் போது, அதற்கு 3 வருட முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Major Android Updates) மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் (Security Patches) கிடைக்கும் என்று நத்திங் நிறுவனம் உறுதி அளித்து இருந்தது. இது ஏற்கனவே ஆண்ட்ராய்டு 13-க்கு (Android 13) புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நத்திங் ஓஎஸ் 2.0 ஆனது நத்திங் போன் 1-க்கு கிடைக்கும் இரண்டாவது பெரிய அப்டேட் ஆக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 1 ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ (Android 12 OS) அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் உடன் அறிமுகமானது.

நத்திங் போன் 1-க்கு நத்திங் ஓஎஸ் 2.0 எப்போது வரும்? நத்திங் சிஇஓ-வான கார்ல் பெய்யின் கூற்றுப்படி, நத்திங் ஓஎஸ் 2.0 அப்டேட் ஆனது வருகிற ஆகஸ்ட் மாத இறுதியில் நத்திங் போன் 1 பயனர்களுக்கு வந்து சேரும். அதாவது நத்திங் போன் 2 அறிமுகமான ஒரு மாதத்திற்குப் பிறகு, நத்திங் போன் 1 ஆனது லேட்டஸ்ட ஓஎஸ் அப்டேட்டை பெறும்.

நத்திங் ஓஎஸ் 2.0-வில் என்ன மாதிரியான மாற்றங்களை / மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்? நத்திங் நிறுவனத்தின் கூற்றுப்படி நத்திங் ஓஎஸ் 2.0 அப்டேட் ஆனது யூஸர் இன்டர்பேஸில் (User Interface - UI) விஷுவல் ஓவர்ஹாலை (Visual overhaul), அதாவது காட்சி மறுசீரமைப்புகளை கொண்டுவரும் மற்றும் நத்திங் விஷுவல் ஐடென்டிட்டியில் (Nothing visual identity) கூடுதல் கூறுகளையும் கொண்டுவரும்.

நத்திங் போன் 2 எப்போது அறிமுகமாகும்? இதற்கிடையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனானது வருகிற ஜூலை 11 ஆம் தேடி இரவு 8.30 மணிக்கு இந்தியா மற்றும் உலகளவில் அறிமிகம் செய்யப்படவுள்ளது. இது அறிமுகமாகும் போதே நத்திங் ஓஎஸ் 2.0 (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) உடன் வருமென்று கூறப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் சிப்செட் மூலம் இயக்கப்படுமென்றும், 6.7-இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்குமென்றும், 4700mAh பேட்டரியை பேக் செய்யுமென்றும் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நத்திங் போன் 2 விலை: சமீபத்தில் வெளியான டீஸர் (Teaser) வழியாக, நத்திங் போன் 2-வின் பேக் பேனலில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிளிஃப் இன்டர்பேஸை (Redesigned Glyph interface) வெளிப்படையாக பார்க்க முடிகிறது. எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.40,000 முதல் ரூ.50,000 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம்!

Best Mobiles in India

English summary
Carl Pei Confirms Nothing Phone 1 Will Get New Nothing OS 2 0 Update After Nothing Phone 2 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X