கூகுள் பிக்சலில் அறிமுகமாகும் கால் ஸ்கிரீன் வசதி.!
இந்நிலையில் தற்போது, உங்களுக்கு யார் போன் செய்கின்றார்கள் என்று ஸ்கிரீனில் தெரிவித்து விடும் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 எக்ஸ்எல், 3 மற்றும் 3 எக்ஸ் எல் உள்ளிட்ட போன்கள் மக்களிடம் மிகவும் பிரபலமானவை.

இந்நிலையில் தற்போது, உங்களுக்கு யார் போன் செய்கின்றார்கள் என்று ஸ்கிரீனில் தெரிவித்து விடும் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கின்றது.

கூகுள் நிறுவனம்:
உலக நாடுகளில் கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போனா பிக்சல் மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின்
போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கின்றது.

பிக்சல் போன்கள்:
இந்தியாவிலும் பிக்சல் போன்கள் பிக்ல் 2, 2 எக்ஸ் எல், 3 மற்றும் 3எக்ஸ் எல் ஆகிய மாடல்களும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களிடம் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இதில் பல்வேறு தொழில் நுட்ப வசதிகளும் இருக்கின்றது.

வரும் புதிய தொழில் நுட்பம்:
கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்களில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கால் ஸ்க்ரீன் என்ற புதிய வசதி, வரும் அழைப்பை ஏற்கும் முன்பே, யார், எதற்காக அழைக்கிறார்கள் என அறிந்து கொள்ள உதவுகிறது.

மாடல் போன்கள்:
அமெரிக்காவில் ஆங்கில மொழி பேசும் வாடிக்கையாளர்களின் Pixel 2, 2 XL, 3, மற்றும் 3XL மாடல்களில் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கால் ஸ்க்ரீன் வாய்ப்பில் அழைக்கும் போதே யார், எதற்காக அழைக்கிறார் என்ற விவரத்தை சொல்ல வேண்டும்.

யாரிடம் இருந்து வருகின்றது:
அழைப்பை இணைத்தவுடன், பெறுபவரின் திரையில் அந்த விவரங்களை எழுத்தாகக் காண்பிக்கும். அதைப் பொறுத்து, முக்கியமான அழைப்பா? முக்கியமற்ற அழைப்பா? என்பதை வாடிக்கையாளர் அறிந்து கொள்ளலாம். இந்த வசதி பிற நாடுகளில் எப்போது அறிமுகமாகும் என்று கூகுள் தெளிவுபடுத்தவில்லை.


Click it and Unblock the Notifications